மேலும் அறிய

ஈரானின் ட்ரோன் தாக்குதல்! சேதமான முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்... வெளியான புகைப்படங்கள்

சவுதி அராம்கோ (Aramco) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த வளாகத்தில், ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் எரிந்த தடயங்கள், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன

சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதங்களை உயர் ரக செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உலகின் மிக முக்கியமான எரிசக்தி நிலையங்களில் ஒன்றான இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தில் சேதம்

சவுதி அராம்கோ (Aramco) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த வளாகத்தில், ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் எரிந்த தடயங்கள்,  மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி வலையமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.

தற்காலிகமாக மூடல்:

ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட பெருந்தீயைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சுத்திகரிப்பு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
:இரண்டு ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவற்றின் சிதறல்கள் விழுந்ததில் "குறைந்த அளவிலான தீ" ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
ராஸ் தனுரா நிலையம் நாளொன்றுக்கு 5,50,000 பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கிறது.

உலகளாவிய சந்தையில் பதற்றம்

இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலைகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றமே இதற்கு முக்கிய காரணமாகும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சில கப்பல் நிறுவனங்கள் தங்கள் பயணங்களைக் குறைத்துள்ளன. இது உத்தியோகபூர்வமாக மூடப்படாவிட்டாலும், எரிசக்தி போக்குவரத்தில் ஒரு "மறைமுகத் தடையை" (informal bottleneck) உருவாக்கியுள்ளது.

வளைகுடா பிராந்தியம் முழுவதும் பரவும் தாக்குதல்கள்

இந்த போரானது சவுதி எல்லைகளையும் தாண்டி விரிவடைந்துள்ளது. பஹ்ரைனின் சல்மான் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தாரில்  அதிகாலை இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic missiles) இடைமறிக்கப்பட்டதை கத்தார் உறுதி செய்துள்ளது.
 சவுதி தலைநகர் ரியாத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டது மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என வளைகுடா பிராந்தியம் முழுவதும் ஈரானிய ஏவுகணைகள் இலக்கு வைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது ராஸ் தனுராவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பழுதுபார்க்கும் கால அவகாசம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதல்கள் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget