Google News: உலகம் முழுவதும் கூகுள் செய்திகள் முடக்கம் - பயனாளர்கள் பெரும் சிரமம்
உலகம் முழுவதும் கூகுள் செய்திகள் மற்றும் கூகுள் டிஸ்கவர் முடங்கியுள்ளது. இது பயனாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களிடம் பெரும்பாலும் இணையதள பயன்பாடு உள்ளது. இணையதள வளர்ச்சி மூலமாக செல்போன் பயன்பாடு பெற்ற பிறகு உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வதில் கூகுளின் பயன்பாடு இன்றியமையாதது.
கூகுள் செய்திகள்:
உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொள்ள கூகுள் செய்திகளை வழங்கி வருகிறது. கூகுள் டிஸ்கவரும் இதற்காக பயன்படுகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கூகுள் செய்திகள், கூகுள் டிஸ்கவர் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், மக்களுக்கு செய்திகளை அறிந்து கொள்வதில் பெரும் பின்னடைவும், சிரமும் ஏற்பட்டுள்ளது. இணைய சேவை குறைபாடு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குறைபாட்டை விரைந்து நீக்கும் பணிகளில் கூகுள் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இணையதள வளர்ச்சிக்கு பின்னர் தற்போது உலகமே உள்ளங்கையில் என்பது போல, செல்போன் மூலமாகவே நாம் நம்மைச் சுற்றி நடக்கும் தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில், கூகுள் செய்திகளின் செயல்பாடுகள் உள்ளது.
பின்னடைவு:
உலகின் பல முன்னணி செய்தி நிறுவனங்களின் செய்திகள் மக்களுக்கு இதன்மூலம் எளிதாக சென்றடைகிறது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அந்தந்த நாடுகளில் பிரபலமாக உள்ள செய்தி நிறுவனங்களின் செய்திகள் கூகுள் செய்திகளில் வருகிறது. கூகுள் செய்திகளின் பயன்பாட்டை அளவிடும் டவுன் டிடெக்டர் பெரியளவில் காலை பின்னடைவை சந்தித்ததாக தரவுகள் அளித்தது. இதன்மூலமாக கூகுள் செய்திகள் பெரும் பின்னடைவிற்குச் சென்றது தெரிய வந்தது.
உலகின் இணையதள வளர்ச்சியில் கூகுளின் செயல்பாடு தவிர்க்கவே முடியாதது ஆகும். பல நாடுகளும் தங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கும், தனிப்பட்ட முறையில் பல நிறுவனங்கள், நபர்களின் வளர்ச்சிக்கும் கூகுள் முக்கியப் பங்கு வகிக்கிறது. கூகுள் செய்திகள் முடங்கியதால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இன்றைய சூழலில், பெரும்பாலானோர் செல்போன்கள் மற்றும் கணினி மூலமாகவே செய்திகளை படித்து வருகின்றனர். இந்த சூழலில், கூகுள் செய்திகள், கூகுள் டிஸ்கவர் முடங்கியது அதைப் பயன்படுத்துவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பின்னர், கூகுள் நிறுவன பணியாளர்கள் குறைபாட்டை சரி செய்தனர். இதையடுத்து, கூகுள் செய்திகளும், கூகுள் டிஸ்கவரும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.