மேலும் அறிய

America Vs Iran: ஈரானை தாக்குமா அமெரிக்கா.? அணுசக்தி பேச்சுவார்த்தை என்ன ஆனது.? ஓமன் வெளியிட்ட முக்கிய தகவல்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அது குறித்து, மத்தியஸ்தம் செய்த ஓமன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஒருபுறம் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று எந்த முடிவும் எட்டப்படாததால், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்த நாடாக செயல்படுகிறது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை குறித்து ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக, தங்களுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அழுத்தம் மட்டுமல்லாமல், ராணுவ தாக்குதல் குறித்த எச்சரிக்கையையும் விடுத்து வருகிறார். மேலும், எச்சரிக்கையோடு நிறுத்தாமல், மத்திய கிழக்கில் அதிக அளவில் படைகளையும் குவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் மற்றும் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் மற்றும் ஏராளமான போர் விமானங்களும், ஆயுதங்களும், படைகளும் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், ஈரான் மீது எந்த நேரத்திலும்  அமெரிக்காவால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரவியதால், அங்கு பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

“அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்“

இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரண்டாம் கட்டமாக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்தையில் மறைமுகமாக பங்கேற்க உள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனாலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஜெனீவாவில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜெனீவாவில் அமெரிக்கா - ஈரான் இடையேயான 3-ம் கட்ட அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்த நாடாக செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தை குறித்து ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் பத்ர் அல்புசைதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான கருத்துகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், இப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், இப்போதைக்கு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ட்ரம்ப்பின் மனநிலையை பொறுத்தே அது உள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
Embed widget