Nirav Modi : ரூ.255 கோடி மதிப்பா? நிரவ் மோடியின் சொத்துகள் ஹாங்காங்கில் முடக்கமா? விவரங்கள் என்ன?
நிரவ் மோடிக்கு எதிரான பணமோசடி விசாரணை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த சொத்துகளின் எண்ணிக்கை ₹2,650 கோடியாக அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கில் நிரவ் மோடியின் நிறுவனங்களின் ₹253 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், வங்கி இருப்புகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
இதன் மூலம் நிரவ் மோடிக்கு எதிரான பணமோசடி விசாரணை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த சொத்துகளின் எண்ணிக்கை ₹2,650 கோடியாக அதிகரித்துள்ளது.
ED attaches assets worth Rs 253 cr of Nirav Modi in Hong Kong
— ANI Digital (@ani_digital) July 22, 2022
Read @ANI Story | https://t.co/ndYuXVxClE#EnforcementDirectorate #NiravModi #HongKong pic.twitter.com/jZEm7ZfzzO
50 வயது நிரம்பிய குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முன்னதாக 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு 2018ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
தொடர்ந்து இந்தியாவின் வேண்டுகோளை அடுத்து அவர் லண்டனில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக நிரவ் மோடியை நாடு கடத்த உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாக மனநல நிபுணர்கள் முன்னதாக சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நிரவ் மோடி மீதான பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது நிறுவனங்களின் 253.62 கோடி மதிப்புள்ள ரத்தினங்கள், நகைகள் மற்றும் வங்கி இருப்புகள் சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகளின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அமலாகக்த்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Michelle Obama : ”நாம் சுமக்கும் ஒளி!” : ஒபாமா குடும்பத்திலிருந்து மற்றுமொரு புத்தகம்! கண்டிப்பா படிச்சு டிக் அடிங்க..
உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்