மேலும் அறிய
Advertisement
Mysterious places in North-East India: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் விநோத திகில் இடங்கள்.. உள்ளூர்வாசிகள் சொல்லும் கதை..
வடகிழக்கு மாநிலங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. இத்தனை வளங்கள் இருப்பினும் வடகிழக்கு மாநிலங்கள் என்றுமே ஒரு மர்மம் நிறைந்த இடமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதுமே மிகவும் அழகான, வளமான, பாரம்பரியமான மற்றும் கலாச்சாரமான நாடு என்று உலகமக்கள் அனைவரும் அறிந்ததே. அதிலும் ஏராளமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், அழகான நிலப்பரப்புகள் என மொத்த அழகும் கொட்டி கிடக்கும் இடம் இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள். அந்த மாநிலங்களின் வளமான கலாச்சாரம், இயற்கை அழகு, பாரம்பரியமான உணவு இவை அனைத்துமே வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது.
இத்தனை வளங்கள் இருப்பினும் வடகிழக்கு மாநிலங்கள் என்றுமே ஒரு மர்மம் நிறைந்த இடமாக பார்க்கப்படுகிறது. சில சுற்றுலா பயணிகள் பயமுறுத்தும் உணர்வை அனுபவித்ததாக கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில இடங்கள் பற்றின தகவல் உங்களுக்காக.
ஜடிங்கா - அஸ்ஸாம் (Jatinga, Assam)
அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவ் என்ற மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் ஒட்டுமொத்தமாக இறக்கின்றன.

ஜடிங்காவில் இந்த பறவைகளின் தற்கொலை ஒவ்வொவரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும். இதில் பூர்வீக பறவைகளான பிளாக் பிட்டர்ன், கிங்ஃபிஷர்ஸ், பாண்ட் ஹெரான், டைகர் பிக்ஸ்டன் போன்ற பறவைகளும் இதில் உள்ளடக்கம். ஜடிங்கா கிராமம் "மரணத்தின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படும்.
ஃபாங்புய் - மிசோரம் (Phawngpui, Mizoram)
ஃபாங்புய் - மிசோரம் (Phawngpui, Mizoram)
மிசோரம் மாநிலத்தின் தெற்கு எல்லையின் அருகில் உள்ளது மாநிலத்தின் உயர்ந்த மலைச்சிகரமான ஃபாங்புய், ப்ளூ மவுண்டன் என்றும் அறியப்படும். ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு இந்த மலை உச்சி மிகவும் பிடித்தமான ஒரு இடம். இருப்பினும் இந்த மாநிலத்தின் உள்ளூர்வாசிகள் இதை பேய்கள் வேட்டையாடும் இடம் என கருதுகின்றனர்.
கெச்சியோபல்ரி ஏரி - சிக்கிம் (Khecheopalri Lake, Sikkim)
மேற்கு சிக்கிம் பகுதியில் சுமார் 147 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கெச்சியோபல்ரி ஏரி. இந்த ஏரியின் தெய்வமான நெஞ்ஜோ வெகுமதியாக ஒரு விலைமதிப்பற்ற கல்லை ஆஷா லாம் என்ற பெண்ணுக்கு கொடுத்தது.
அந்த கல் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு நாட்டுப்புற கதையை கூறுகிறார்கள் அந்த உள்ளூர்வாசிகள். இந்த ஏரி மிகவும் புனிதமான ஒரு இடமாக கருதப்படுகிறது. இந்த ஏரி குணப்படுத்தும் குணம்பெற்றது என்றும் பார்வையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என்றும் நம்பப்படுகிறது.
நோஹ்கலிகாய் நீர்வீழ்ச்சி - மேகாலயா (Nohkalikai Falls, Meghalaya)
இந்த நீர்வீழ்ச்சிக்கு ஒரு விசித்திரமான கதை சொல்லப்படுகிறது. அதாவது கா லிகாய் என்ற ஒரு பெண்மணி தனது முதல் திருமணம் மூலம் பிறந்த மகளை தனது இரண்டாவது கணவர் கொன்று அவளின் சதையை இரவு உணவுக்காக சமைத்துள்ளார்.

இதனை அறிந்த தாய் கா லிகாய் இந்த நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு நோஹ்கலிகாய் என்று பெயரிடப்பட்டது என தகவல்கள் கூறப்படுகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion