Drone strike: வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்! அரபிக்கடலில் பெரும் பதற்றம் - இஸ்ரேலுக்கு தொடர்பா?
அரபிக்கடலில் செம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குததல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை கிளப்பி இருக்கிறது.
Drone strike: அரபிக்கடலில் செம் புளூட்டோ என்ற வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குததல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை கிளப்பி இருக்கிறது.
அரபிக் கடலில் ட்ரோன் தாக்குதல்:
அரபிக் கடலில் எம்.வி. செம் புளூட்டோ என்ற வணிக கப்பல் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூருவுக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எம்.வி. செம் புளூட்டோ வணிக கப்பல் மீது ஆளில்லா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதல் காரணமாக, கப்பலில் இருந்து வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த தாக்குதலில் எந்த விதமான உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதாவது, 20 இந்தியர்கள் உட்பட அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்ட போதும் அதன் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் போர்பந்தர் பகுதியில் இருந்து 217 கடல்மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது பெரும் பதற்றத்தை கிளப்பி இருக்கிறது.
இஸ்ரேலுக்கு தொடர்பா?
UKMTO WARNING 018/DEC/2023
— United Kingdom Maritime Trade Operations (UKMTO) (@UK_MTO) December 23, 2023
ATTACK – INCIDENT 018 UPDATE 01
UKMTO have received a report of an attack by Uncrewed Aerial System (UAS) on a vessel causing an explosion and fire. https://t.co/qFzIsjDvnj#MaritimeSecurity #marsec pic.twitter.com/gBARms8K9T
கச்சா எண்ணெய் கப்பல் மீதான ட்ரோன் தாக்குதலை அடுத்து, கடற்படை போர்க்கப்பல்களை விரைந்துள்ளன. இதுகுறித்து, பிரட்டனின் யுனைடெட் கிங்டம் மாரிடைம் ட்ரேட் ஆப்ரேஷன்ஸ் கூறுகையில், "அரபிக் கடலில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலில் இருந்து அனைவரும் பத்திரமாக உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்னறனர். இந்தியாவுக்கு அருகாமையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இனிவரும் காலங்களில், கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை அறிந்தால் புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல் இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல் என்று கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அரபிக் கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க