மேலும் அறிய

Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விமானத்தில் பறந்துகொண்டே, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது அதற்கான உத்தரவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஒரு நிர்வாக உத்தரவு மூலம், பிப்ரவரி 9-ம் தேதியை, வளைகுடா அமெரிக்க நாள் என அறிவித்துள்ளார்.

மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் பற்றி பேசிய ட்ரம்ப்

கடந்த 4-ம் தேதியன்று ஃப்ளோரிடாவில் நடந்த செய்தியார் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விரைவில் ஒரு மாற்றத்தை அறிவிக்க உள்ளோம், ஏனென்றால் அது எங்களுடையது என கூறி, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போகிறோம் என அறிவித்தார். அமெரிக்க வளைகுடா ஒரு அழகான பெயர், அது சரியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

வளைகுடாவின் பெயரை மாற்றி உத்தரவு

இந்த நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா என பெயரை மறுமாற்றம் செய்யும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, மெக்சிகோவிற்கு கால்பந்து போட்டியை காண விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, பெயர் மாற்றத்திற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், ஒரு நிர்வாக உத்தரவின் மூலம், பிப்ரவரி 9-ம் தேதியை, ”வளைகுடா அமெரிக்க நாள்” என்றும் அறிவித்துள்ளார். அமெரிக்க நிறைவேற்று ஆணை 14172-ன் ஒரு பகுதியான ‘அமெரிக்காவின் பெருமையை மதிக்கும் பெயர்களை மீட்டெடுத்தல்‘ என்ற தலைப்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவில், மெக்சிகோ வளைகுடா என முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதி நீண்ட காலமாக வளர்ந்து வரும் நமது தேசத்தின் ஒருங்கிணைந்த சொத்தாக இருந்து, அமெரிக்காவின் அழியாக பகுதியாக இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும், 30 நாட்களுக்குள் பெயர் மாற்றத்தை முறைப்படுத்துமாறும் அமெரிக்க உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலையின் பெயரையும் மாற்றிய ட்ரம்ப்

இதேபோல், வட அமெரிக்காவில் உள்ள உயரமான மலையான டனாலியின் பெயரையும் மெக்கன்லி மலை என மாற்றியுள்ளார் ட்ரம்ப். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் வில்லியம்ஸ் மெக்கன்லியை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த பெயர் மாற்ற நடவடிக்கையால், அமெரிக்காவின் பாரம்பரியம் காக்கப்படும் என்றும், நாட்டின் நாயகர்கள், வரலாற்று சொத்துக்களை இளைய தலைமுறை அறிந்துகொள்ளவும் உதவும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா-மெக்சிகோ இடையே அதிகரிக்கும் பதற்றம்

ஏற்கனவே, மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இரு நாடுகளுக்குமிடையே மோதல் போக்கு தொடங்கியது. மெக்சிகோவும் பதிலடி கொடுக்கும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஒன்று, ஆப்பிள் நிறுவன பொருட்களிலிருந்து சாம்சங் நிறுவன பொருட்களுக்கு மாறிவிடுவோம் என மிரட்டியது. இப்படி, இரண்டு நாடுகளும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தின.

எனினும், மெக்சிகோ எல்லையில் 10,000 படை வீரர்களை அமெரிக்க நிறுத்துவதற்கு மெக்சிகோ ஒப்புக்கொண்ட நிலையில், அந்நாட்டு பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், தற்போது மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என ட்ரம்ப் பெயர் மாற்றியுள்ளதற்கு, மெக்சிகோ என்ன எதிர்வினையாற்றும் என்ற எதிர்பார்ப்பு, உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget