மேலும் அறிய

Chess Robot Watch : செஸ் போட்டியில் வேகமாக காயை நகர்த்திய சிறுவன்...விரலை உடைத்துவிட்ட ரோபோட்..

ரஷ்யாவில் ஆண்ட்ராய்டு காம்பிட் உருவாக்கிய ரோபோட், செஸ் விளையாடும்போது 7 வயது சிறுவனின் விரலை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் ஆண்ட்ராய்டு காம்பிட் உருவாக்கிய ரோபோட், செஸ் விளையாடும்போது 7 வயது சிறுவனின் விரலை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 19 அன்று மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் ஏழு வயது சிறுவன், செஸ் விளையாடுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரோபோட்டுடன் மோதிய போது இந்த சம்பவம் நடந்தது. 

தனது முறை வரும்வரை காத்திருக்காமல் சிறுவன் வேகமாக காயை நகர்த்தியபோது, சிறுவனின் விரலை ரோபோ உடைத்ததாக ஏற்பாட்டுக் குழு தெளிவுபடுத்தியது. ஏழு வயது சிறுவன், கிறிஸ்டோபரின் விரலை ஆண்ட்ராய்டு ரோபோட் உடைத்துள்ளது. ரோபோட் தனது காயை நகர்த்துவதற்கு முன்பு, சிறுவன் தனது காயை நகர்த்தியாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஆய்வாளர்கள், "ரோபோவுக்கு சிறுவன் அவசரப்பட்டது பிடிக்கவில்லை. எனவே அது கிறிஸ்டோபரின் ஆள்காட்டி விரலைப் பிடித்து கடுமையாக அழுத்தியது" என தெரிவித்தனர்.

மாஸ்கோவில், ஒன்பது வயதுட்பட்ட சிறந்த 30 வீரர்களில் கிறிஸ்டோபரும் ஒருவர். 

இதுகுறித்து ரஷ்ய செஸ் கூட்டமைப்பு தலைவர் கூறுகையில், "காயை நகர்த்தும் வரை ரோபோ காத்திருந்த போதிலும், சிறுவன் விரைவாக காய் நகர்த்தியதால், ரோபோ சிறுவனின் விரலை உடைத்தது" என்றார். இதுபோன்று நடைபெறுவது இதுவே முதல் முறை எனக்கூறிய அவர், குழந்தை பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தற்செயலான சம்பவம் என்றும், செஸ் ரோபோ மிகவும் பாதுகாப்பானது என்றும் தெளிவுபடுத்திய அவர்கள், மற்றொரு பாதுகாப்பான அமைப்பை நிறுவலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். ரோபோ சிறுவனை பிடித்ததும், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரோபோவின் பிடியில் இருந்து அவரை விடுவித்தனர். 

பின்னர், மாற்று போட்டியாளர்களை கொண்டு, கிறிஸ்டோபர், போட்டியை நிறைவு செய்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் உள்ளூர் வழக்கறிஞரை அணுகி போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இது பற்றிய வீடியோ வைரலான பிறகு, இணையத்தில் பலர் ரோபோவின் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் தீங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 

சதுரங்கம் விளையாடும் ரோபோக்கள், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தைவானை சீர்குலைத்த 'சாம்பி': 500 பேர் படுகாயம் - 1000 விமான சேவைகள் ரத்து
தைவானை சீர்குலைத்த 'சாம்பி': 500 பேர் படுகாயம் - 1000 விமான சேவைகள் ரத்து
விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
மழைக்காலத்தில் கேள்விக்குறியாகும் உடல்நலம்: உணவையே மருந்தாக்குவது எப்படி?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்...! மகேஷின் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவானா?
TN Govt: சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
Embed widget