வங்கதேச தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 52 பேர் உயிரிழப்பு..!
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் தீ விபத்து நடைபெற்ற நேரத்தில் தொழிற்சாலையின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.
நரியங்கஞ்சின் ரூப்கஞ்சில் உள்ள ஆறு மாடிக் கொண்ட ஷெஸான் ஜூஸ் தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருப்பதால் தீ கட்டிடத்தின் தரை தளத்திலிருந்து தோன்றி விரைவாக பரவியது என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் தப்பிக்க பல தொழிலாளர்கள் கட்டிடத்திலிருந்து குதித்தனர். ஹஷேம் ஃபுட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க பதினெட்டு தீயணைப்புப் பிரிவுகள் போராடி வந்தன. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடி அவர்கள் உறவினர்கள் கட்டிடத்தின் முன்பு கூடினர். காணாமல் போன 44 தொழிலாளர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tropical Elsa Storm : அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல் : வெள்ளத்தில் மிதக்கும் புளோரிடா..!
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் தீ விபத்து நடைபெற்ற நேரத்தில் தொழிற்சாலையின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினர். கட்டிடத்தில் சரியான தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
நாராயங்கஞ்ச் மாவட்ட தீயணைப்பு சேவையின் துணை இயக்குநர் அப்துல்லா அல் அரேபின் கூறுகையில், “இந்த தீ விபத்தால், எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் விபத்திற்கான காரணத்தை தற்போதைக்கு சரியாகச் சொல்லமுடியாது" என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில், டாக்காவில் 400 ஆண்டுகள் பழமையான பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கடைகள் மற்றும் கிடங்குகள் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் மற்றொரு தீ விபத்தில் குறைந்தது 25 பேர் இறந்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டில், டாக்காவின் புறநகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பூட்டிய கேட்டிற்கு பின்னால் சிக்கிய 112 பேர் உயிரிழந்துள்ளனர். பழைய டாக்காவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக ரசாயனங்களை சேமித்து வைத்திருந்த வீட்டில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் குறைந்தது 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
Dubai DeepDive | 'அடேங்கப்பா 196 அடி ஆழமா.. நீ பாத்த' - பாக்காதவங்க, இந்த வீடியோவைப் பாருங்க..!