மேலும் அறிய

படகில் நிரம்பி வழிந்த பயணிகள்... ஆற்றின் நடுவே விபத்து... 23 பேர் பலி

வங்கதேசம் கரடோயா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அன்று பயணிகள் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசம் கரடோயா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அன்று பயணிகள் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

 

விபத்து குறித்து பேசிய உள்ளூர் காவல்துறை அலுவலர் ஷஃபிகில் இஸ்லாம், "23 உடல்களை மீட்டுள்ளோம். மேலும், உடல்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் தேடி வருகின்றனர்" என்றார்.

இது தொடர்பாக வடக்கு பஞ்சகரின் மாவட்ட நிர்வாக ஜஹுருல் இஸ்லாம் பேசுகையில், "இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், 70க்கும் மேற்பட்டோர் படகில் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்" என்றார்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் படகின் முழுவதிலும் இருந்தனர். அப்போது, வடக்கு வங்கதேசத்தில் உள்ள போடா நகருக்கு அருகே கரடோயா ஆற்றின் நடுவில் படகு திடீரென கவிழ்ந்து மூழ்கியது.

கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் அமைந்துள்ள வங்கதேசத்தில், ஆறுகளில் செல்லும் படகுகள் விபத்துக்குள்ளாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன.

மே மாதத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மணல் ஏற்றப்பட்ட கப்பல், அதிக பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற விரைவுப் படகில் மோதி பத்மா நதியில் மூழ்கியதில் குறைந்தது 26 பேர் இறந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு, ஜூன் மாதம், டாக்காவில் ஒரு படகு மற்றொரு கப்பலுடன் மோதி கவிழ்ந்தது. இதில், குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், நேத்ரகோனாவின் மதன் உபாசிலாவில் படகு மூழ்கியதில் 17 பேர் இறந்தனர்.

 

அதற்கு முன், 2015 பிப்ரவரியில், வங்கதேசத்தில் ஒரு ஆற்றில், சரக்குக் கப்பலுடன், நெரிசல் மிகுந்த கப்பல் மோதியதில், குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
Nvidia CEO: 30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
காகிதத்தில் வாக்கு… ஸ்கேனரில் வேகம்… கணினியில் கணக்கு… தேர்தல் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அசுர பலம்!
காகிதத்தில் வாக்கு… ஸ்கேனரில் வேகம்… கணினியில் கணக்கு… தேர்தல் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அசுர பலம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
Operation Bengaluru :’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
TN Govt: தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
Embed widget