சினிமா பாணியில் சேஸிங்...கடத்தல் லாரியை துரத்திச் சென்று மடக்கிய போலீஸ் - அதிர்ச்சி வீடியோ
அச்சரப்பாக்கத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட லாரியை திண்டிவனம் அருகே துரத்திச் சென்று சினிமா பாணியில் சேஸிங் செய்து மடக்கிய போலீஸார்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்து லாரியை திருடி வந்த ஆசாமியை பல கிலோமீட்டர் தூரம் சென்று மடக்கிப் பிடித்த போலீஸ் சுங்கசாவடியை உடைத்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர்தனியார் கொரியர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் அச்சரப்பாக்கத்தில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக லாரியின் சாவியுடன் நிறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் லாரியை எடுத்துக் கொண்டு ஆத்தூர் சுங்க சாவடியை உடைத்து அதிவேகமாகச் சென்றார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் திண்டிவனம் ரோந்து பிரிவு போலீசார் கடத்தப்பட்ட வாகனத்தை பிடிப்பதற்காக தயாராக நின்றிருந்தனர்.
அப்பொழுது போலீசாரை கண்டவுடன் அந்த நபர் லாரியை அதிவேகமாக ஒட்டி சென்றார். சினிமா பாணியில் போலீசார் அந்த லாரியை பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று திண்டிவனம் ஜக்காம்பேட்டை அருகே மடக்கி பிடித்தனர். அந்த மர்ம நபரை காவல் நிலையம் வந்து அழைத்து விசாரித்ததில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சோமு என்கின்ற மாடசாமி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அச்சரப்பாக்கம் போலீசார் மாடசாமி கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் பார்சல் லாரி டோல்கேட்டை அடித்து உடைத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்