மேலும் அறிய

கலக்கத்தில் அமித்ஷா... போராட்ட களமாக மாறிய தமிழகம்... தொடரும் ரயில்மறியல்

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் ரயில் நிலையங்களில் விசிகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரியும் கண்டனம் தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்றார். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ், திமுக,விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமித்ஷா விளக்கம் என்ன ?

இந்நிலையில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; எனது முழு பேச்சையும் கேட்டுவிட்டு பேசுங்கள். நாங்கள், அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை.

நேற்று முதல் காங்கிரஸ் கட்சியானது, எனது உரையை திரித்து, உண்மைக்கு எதிரான கருத்தை முன்வைத்து வருகிறது, அதை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியானது அம்பேத்கருக்கு எதிரானது; இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியினர் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளனர். அவசரகால சட்டம் மூலம் , அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெடித்த போராட்டம்

கண்டமங்கலங்கத்தில் விசிகவினர் ரயில் மறியல்

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசிகாவினர் புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் இரயில் முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டம் காரணமாக புதுச்சேரி விழுப்புரம் பயணிகள் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
 
திண்டிவனத்தில் விசிகவினர் ரயில் மறியல்
 
திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட விசிகருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
திண்டிவனம் தபால் அலுவலகம் முற்றுகை
 
அதனை தொடர்ந்து முன்னாள் மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் திண்டிவனம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வீசிக சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
 
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது 15 நிமிடத்திற்கு நேரத்துக்கு மேலாக தாமதமாக சென்றது. ரயில் மறியல் போராட்டத்தில் மயிலம் எஸ் ஐ வெங்கடேசனின் செல்போன் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
 
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் அப்போது அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா உருவப்படத்தை எரித்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். அதேபோல கடலூர் திமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் பாரதி சாலையில் பேரணியாக வந்த திமுகவினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்EPS vs SP Velumani : SP வேலுமணி vs EPS?சர்ச்சைகளுக்கு ENDCARD! EPS மெகா ப்ளான்Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
Menstrual Leave: மகளிர் தின ஸ்பெஷல்! L&T நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்! குஷியில் பெண் ஊழியர்கள்!
ராகுல்காந்திக்கு வெறும் ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம் – ஏன் தெரியுமா?
ராகுல்காந்திக்கு வெறும் ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம் – ஏன் தெரியுமா?
Boat Ride in Chennai: சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
சென்னையிலேயே இனி ஜாலியாக படகு சவாரி செய்யலாம்... எங்கன்னு தெரியுமா.?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
Womens Day 2025 Wishes: உலக மகளிர் தினம் - தாய், தாரம், மகள், தோழிக்கான வாழ்த்து செய்திகள் - ஸ்டேடஸ் என்ன போடலாம்?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Embed widget