கடலூரில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சிறு தொழில் செய்யும் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவரும் இழுவை வலை படகுகளின் செயல்பாடுகளை தடுக்கக் கோரிக்கை
கடலூரில் சிறு தொழில் செய்யும் மீனவர்களை அச்சுறுத்தி வரும் இழு வலை படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடல் வழியாக 100க்கும் மேற்பட்ட படகில் கருப்புக் கொடி கட்டி வந்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாதல் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டத்தில் 49 மீனவர் கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் பைபர் படகுகள் மற்றும் 500 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும் 20 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் எஸ்டிபி, ஐ.பி., ஆகிய விசை படகுகள் தமிழக அரசு நிர்ணயித்த அளவினை விட கூடுதலாகவும், கூடுதல் குதிரை திறன் கொண்ட என்ஜின்களையும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வலைகளுக்கான கண்ணினை நிர்ணயித்தை அளவை விட சிறியதாக வைத்தும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிறு தொழில் செய்யும் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவரும் இழுவை வலை படகுகளின் செயல்பாடுகளை தடுக்கக் கோரியும் மீன்வளத்துறையினர் இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த காலங்களில் மீனவர்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வந்தனர் மேலும் பல முறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகளின் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளில் கருப்பு கொடி கட்டி 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 500 - க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் வழியாக வந்து மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சட்டத்தை மீறும் படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் மீனவர்கள் இதை ஏற்க மறுத்து இழுவைப்படகுகள் சட்டத்திற்கு உட்பட்டு சிறுதொழில் மீனவர்கள் அச்சுறுத்தக் கூடாது எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் தொழிலுக்கு செல்ல மாட்டோம் என்று படகுகளின் பதிவு புத்தகத்தை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு தவறு செய்து வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் மீண்டும் அதனை பேற்றுக்கொள்கிரோம் என கூறிவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் மீனவர்களின் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது இதன் காரணமாக அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.