அகமதாபாத் - திருச்சி வாராந்திர சிறப்பு ரயில் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு
அகமதாபாத் - திருச்சி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
தெற்கு ரயில்வே வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் ( வண்டி எண் : 09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடர்ந்து இம்மாதம் 2,9,16,23 மற்றும் மார்ச் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் ( வண்டி எண் : 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடர்ந்து இம்மாதம் 5,12,19,26 மற்றும் மார்ச் மாதம் 5,12,19,26, மற்றும் ஏப்ரல் மாதம் 2 ஆகிய தேதிகளில் 9 சேவைகள் இயக்கப்படுகிறது.
Services of Ahmedabad- Tiruchchirappalli-Ahmedabad weekly specials extended - Bookings open tomorrow ( 2nd Feb) from Southern Railway end pic.twitter.com/UTmtQIrzcW
— Southern Railway (@GMSRailway) February 1, 2023
மேலும் இந்த ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ,மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம் ,கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ,சென்னை எழும்பூர், பெரம்பூர் ,அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்