மேலும் அறிய

Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்

Budget Hatchback Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில், குறைந்த பராமரிப்பு செலவில் கிடைக்கும் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • இந்தியாவில் குறைந்த பராமரிப்புச் செலவில் 5 சிறந்த ஹேட்ச்பேக் கார்கள்.
  • ஆல்டோ K10, வேகன் R, டியாகோ, i10 நியோஸ், பலேனோ மாடல்கள்.
  • குறைந்த விலை, அதிக மைலேஜ், நீண்ட உத்தரவாதம் வழங்கப்படுகின்றன.
  • வாகனங்களுக்கான சலுகைகள், நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றவை.

Budget Hatchback Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில், குறைந்த பராமரிப்பு செலவில் கிடைக்கும் 5 ஹேட்ச்பேக் கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மலிவு விலை.. குறைந்த பராமரிப்பு செலவு..

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில், குறைந்த பராமரிப்பு செலவில் ஹேட்ச்பேக் காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உள்நாட்டு சந்தையில் இதற்கு ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக பல பிரபலமான கார் மாடல்களும் இந்த பிரிவில் வருகின்றன. அதன்படி, மாருதி சுசூகி ஆல்டோ கே10, டாடா டியாகோ, மாருதி சுசூகி வேகன் ஆர் ஆகியவை அடங்கும். இதுபோக மாருதி சுசூகி பலேனோ மற்றும் ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோ கார்களையும் பயனர்கள் தேர்வு செய்யலாம். இவற்றின் பரமாரிப்பு செலவை குறைக்கும் வகையில், விற்பனையின் போதே வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காசை மிச்சப்படுத்தும் கார் மாடல்கள்:

1. மாருதி சுசூகி ஆல்டோ கே10

மாருதி சுசுகி ஆல்டோ K10 ரூ.3.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இந்த ஹேட்ச்பேக்கானது பெட்ரோல் மேனுவல் வேரியண்டில் லிட்டருக்கு 24.39 கிமீ, பெட்ரோல் AGS வேரியண்டில் லிட்டருக்கு 24.90 கிமீ மற்றும் சிஎன்ஜி எடிஷனில் லிட்டருக்கு 33.40 கிமீ மைலேஜ் தரும் என்று ப்ராண்ட் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையின்போதே 1 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 3 ஆண்டுகள் (6 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடியது) வரை உத்தரவாதத்தை வழங்குகிறது. இது காருக்கான பராமரிப்பு செலவை கணிசமாக குறைக்கிறது.
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்

2.  மாருதி சுசூகி வேகன் ஆர்

மாருதி சுசூகியின் வேகன் ஆர் டால்பாய் ஹேட்ச்பேக்கும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் விலையானது ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் ) என்ற ரேஞ்சில் தொடங்குகிறது. வேகன் ஆர் பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜ் வழங்க,  சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 33.47 கிமீ ஓடும் என்று ப்ராண்ட் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கும் 1 லட்சம் கிமீ அல்லது 3 ஆண்டுகள் (6 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்) உத்தரவாதத்தை மாருதி சுசூகி நிறுவனம் வழங்குகிறது. அதிகப்படியான மைலேஜ் மற்றும் குறைந்த செலவு என இரண்டு விதங்களிலும் பயனர்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்

3. ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

ஹுண்டாய் கக்ராண்ட் i10 நியோஸ் ரூ.5.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், ஆரம்பம்) என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  வாகனத்திற்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் உத்தரவாதம், 3 ஆண்டுகள் சாலையோர உதவி மற்றும் 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ப்ராண்ட் வழங்குகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் வரையிலும், சிஎன்ஜி வேரியண்ட் கிலோவிற்கு 27 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் மைலேஜ் வழங்குகிறது. எளிய வடிவம், நடைமுறைக்கு உகந்த வடிவமைப்பு மூலம், நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மாடலாக க்ராண்ட் ஐ10 நியோஸ் விளங்குகிறது.

4. டாடா டியாகோ

உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான டாடாவின் மிகவும் மலிவு விலை காரான டியாகோவும் இந்த பட்டியலில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.4.57 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜினை கொண்டு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் வரையிலும், CNG எடிஷனில் கிலோவிற்கு 28 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் மைலேஜ் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் டியாகோவிற்கு 3 ஆண்டுகள்/1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. பட்டியலில் அதிகபட்சமாக இந்த காரானது பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்

5. மாருதி சுசூகி பலேனோ

மாருதி சுசூகி பலேனோவின் ஆரம்ப விலை ரூ.5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பலேனோ 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரை நிலையான உத்தரவாதத்தையும் 6 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத காலத்தையும் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் எடிஷன் சுமார் 22 கிலோ மீட்டரும், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு சுமார் 30 கிலோ மீட்டரும் மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விலையுயர்ந்த கார் மாடலாக பலேனோ விளங்குகிறது.

Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

குறைந்த பராமரிப்பு செலவில் கிடைக்கும் சில ஹேட்ச்பேக் கார்கள் யாவை?

மாருதி சுசூகி ஆல்டோ கே10, டாடா டியாகோ, மாருதி சுசூகி வேகன் ஆர், மாருதி சுசூகி பலேனோ மற்றும் ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஆகியவை குறைந்த பராமரிப்பு செலவில் கிடைக்கும் ஹேட்ச்பேக் கார்கள் ஆகும்.

மாருதி சுசூகி ஆல்டோ கே10 இன் மைலேஜ் என்ன?

மாருதி சுசூகி ஆல்டோ கே10 பெட்ரோல் மேனுவல் வேரியண்டில் லிட்டருக்கு 24.39 கிமீ, பெட்ரோல் AGS வேரியண்டில் லிட்டருக்கு 24.90 கிமீ மற்றும் சிஎன்ஜி எடிஷனில் லிட்டருக்கு 33.40 கிமீ மைலேஜ் தரும்.

டாடா டியாகோ காரின் மைலேஜ் மற்றும் பாதுகாப்பு ரேட்டிங் என்ன?

டாடா டியாகோ பெட்ரோல் எடிஷனில் லிட்டருக்கு 20 கிமீ வரையிலும், CNG எடிஷனில் கிலோவிற்கு 28 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். இது 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் வழங்கும் உத்தரவாத காலம் எவ்வளவு?

ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் உத்தரவாதம், 3 ஆண்டுகள் சாலையோர உதவி மற்றும் 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
பட்ஜெட் விலையில் ஒரு 'மாஸ்' பைக்! டிவிஎஸ் ஸ்போர்ட் vs பஜாஜ் பிளாட்டினா - எதை வாங்கினால் லாபம்?
பட்ஜெட் விலையில் ஒரு 'மாஸ்' பைக்! டிவிஎஸ் ஸ்போர்ட் vs பஜாஜ் பிளாட்டினா - எதை வாங்கினால் லாபம்?
Affordable Safe Cars: குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
Upcoming Maruti EV Cars: பட்ஜெட் விலை.. மிரளவைக்கும் மைலேஜ்! சந்தைக்கு வரப்போகும் மாருதி சுசுகியின் 3 மின்சார கார்கள் - என்னென்ன?
Upcoming Maruti EV Cars: பட்ஜெட் விலை.. மிரளவைக்கும் மைலேஜ்! சந்தைக்கு வரப்போகும் மாருதி சுசுகியின் 3 மின்சார கார்கள் - என்னென்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: ”ஒரு ஈரான் கப்பலையும் விட்றதா இல்லை” அதிநவீன் ஜெட், கப்பல்களை இறக்கிய அமெரிக்கா - ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஒரு ஈரான் கப்பலையும் விட்றதா இல்லை” அதிநவீன் ஜெட், கப்பல்களை இறக்கிய அமெரிக்கா - ட்ரம்ப் வார்னிங்
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
TN Election: ஊட்டியில் மீண்டும் கைகட்ட விரும்பாத விஜய் - ரீல் அப்பாக்கள் அட்டாக் - 13 மார்க் போதுமா? என கேள்வி
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தாயின் சட்ட போராட்டம்.. 2 மகன்களுக்கு குடியுரிமை கேட்டு வழக்கு, உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய உத்தரவு !
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
ஒரே சார்ஜில் 320 கி.மீட்டர் மைலேஜ்! அறிமுகமாகியது Ola S1 X இ ஸ்கூட்டர் - விலை என்ன?
Seeman : விஜயை விமர்சிக்கிறதா TN2026 படம் ? சீமான் கொடுத்த விமர்சனம் பாருங்க
Seeman : விஜயை விமர்சிக்கிறதா TN2026 படம் ? சீமான் கொடுத்த விமர்சனம் பாருங்க
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Embed widget