மேலும் அறிய
"திருச்சி NIT மாணவர்களின் போராட்டம் வாபஸ்” - எஸ்.பி. முன்னிலையில் மன்னிப்பு கேட்ட வார்டன்..!
களத்திற்கு வந்த எஸ்.பி. வருண்குமார் போராடும் மாணவர்களிடம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்

மாணவர்கள் போராட்டம்
Source : other
நேற்று எஸ்.பி வருண்குமார் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் நேற்று இரவு முதல் போராடி வந்த திருச்சி என்.ஐ.டி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
களத்திற்கு வந்த எஸ்.பி. வருண்குமார் போராடும் மாணவர்களிடம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாலியல் சீண்டலுக்கு உள்ளான மாணவியிடன் தனி பெண் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதோடு, விடுதி வார்டனையும் அழைத்து மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால், காவல்துறை மீது நம்பிக்கைக்கொண்டு மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















