மேலும் அறிய

திருச்சியில் காற்று மாசின் அளவு 2030 ஆண்டில் 25% அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

தமிழ் நாட்டில் உள்ள நான்கு மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் காற்று மாசைக் குறைக்க முடியும் எனவும் தெரிய வந்துள்ளது.

காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டில் திருச்சியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் 25% அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இத்தரவானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையம்(Center for Study of Science, Technology, and Policy (CSTEP)) பெங்களூரில் ஆகஸ்ட் 23-25 வரை நடத்திய மாசற்ற காற்றுக்கான இந்திய அளவிலான மாநாட்டில் பகிரப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான விவரப்பட்டியலின் (Emissions Inventory) அடிப்படையில் ஆய்வு ஒன்றை CSTEP மேற்கொண்டது. இந்த ஆய்வில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால், தூத்துக்குடியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாசு வெளியேற்றம் தொடர்பான விவரப்பட்டியல் (Emissions Inventory) என்பது ஒரு ஆண்டு அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடுகளின் அளவை, எங்கிருந்து வெளியேறுகிறது என்பதைச் சேர்த்து பட்டியலிடும் ஒரு தரவுத்தளமாகும். இந்தியாவின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்களுக்கான பட்டியலை CSTEP தயாரித்துள்ளது.

திருச்சியில் காற்று மாசின் அளவு 2030 ஆண்டில்  25% அதிகரிக்கும் -  ஆய்வில் தகவல்

மேலும், ஆய்வின்படி சென்னையின் மாசு வெளியேற்றம் தூத்துக்குடியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போதுள்ளபடியே தொழிற் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டு, சென்னையில் அதிகபட்சமாக 27 விழுக்காடும், திருச்சியில் 25 விழுக்காடும், மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் மாசு வெளியேற்றம் அதிகரிக்கும் என்று CSTEP ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையிலிருந்து திருச்சியில் 36 விழுக்காடும். மதுரையில் 27 விழுக்காடும், சென்னையில் 27 விழுக்காடும். தூத்துக்குடியில் 20 விழுக்காடும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, CSTEP மையத்தின் மூத்த ஆய்வாளர், டாக்டர். ப்ரதிமா சிங் கூறுகையில், "எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசைக் குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைக்கலாம்" எனக் கூறினார்.

மேலும், இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் எத்திராஜன் கூறுகையில், "சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற நகரங்களில், காற்றின் தரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள காற்று மாசு அதிகமாக இருக்கும் (Non-Attainment Area Program (NAAP) நகரங்களில் PM10 காற்று மாசு நுண்துகள் அளவை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த இயக்கவியல் பற்றிய விரிவான புரிதலை நிறுவுவதும், மாசற்ற காற்றுக்கான பயனுள்ள உத்திகளை உருவாக்குவதும் எங்கள் குறிக்கோள்" எனக் குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget