கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் பரிசோதனை
’’சமீபத்தில் குணமடைந்த 3 பெண்கள் உட்பட 8 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது’’
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சுகாதாரத்துறை தீவிர பணியில் இறங்கியுள்ளது , சென்னை உட்பட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒமிக்ரான் வைரஸ் பகுப்பாய்வு செய்யும் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற 800 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா வார்டுகள் உள்ளது , இதில் 150 படுக்கைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிராக சாலை மறியல் - குப்பைகளை காவிரி ஆற்றில் கொட்டுவதாக புகார்
ஒமிக்ரான் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த சிறப்பு வார்டில் போதுமான ஆக்ஸிஜன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது ஏற்கனவே 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 20 ஆயிரம் லிட்டர் வரை ஆக்சிஜன் இருப்பு உள்ளது எனவே ஆக்சிஜன் பிரச்சனை தற்போது வரை இல்லை என்றும் போதிய அளவில் முகக் கவசங்கள் கையுறைகள் மருந்து வகைகள் சானிடைசர்கள் இருப்பு உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் கொரோனா தோற்றால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவர்களிடமிருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன அந்த வகையில் மாவட்டத்தில் சமீபத்தில் குணமடைந்த 3 பெண்கள் உட்பட 8 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் யாருக்கும் புதுவித ஒமிக்ரான் தாக்குதல் இல்லை என வந்துள்ளது இருப்பினும் கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு அதிதீவிர நோய் தாக்கம் ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி உடனடியாக ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது தடுப்பூசி இதுவரை போடாத மக்கள் உடனடியாக வந்து தடுப்பூசி போட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவால் மொத்தமாக 60 ஆயிரத்து 199 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை விசாரித்த நல்லம நாயுடு வீட்டில் நகை, பணம் கொள்ளை