மேலும் அறிய

CM MK Stalin Speech: ’தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு, இந்தியாவை காப்பாற்ற வேண்டும்’.. வெளுத்துவாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தற்பொழுது நாம் வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தற்பொழுது நாம் வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. நாகை எம்பி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு.
 
நாகை தொகுதி எம்பி எம். செல்வராஜ் இல்ல திருமண விழா, திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவை நடத்தி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது... இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவிற்கும் எப்போதும் நட்பு உண்டு அன்பு உண்டு கலைஞர் தான் பெருமையோடு கூறுவார் தந்தை பெரியாரை நான் பார்த்திருக்காவிட்டால் அறிஞர் அண்ணாவை நான் சந்தித்திருக்காவிட்டால் நான் கம்யூனிஸ்ட் கட்சியாக தான் இருந்திருப்பேன் என்று கலைஞர் அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டி உள்ளார்கள். ஆகவே அந்த உணர்வோடு நம் நட்பு தேர்தலுக்கான நட்பு மட்டுமல்ல கூட்டணி நேரத்திலே இருக்கக்கூடிய நட்பு மட்டுமல்ல கொள்கை நட்பு அதுதான் முக்கியம் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் சரி ஆளுங்கட்சியாக இருக்கிற போதிலும் சரி அது தொடர்கிறது. தொடர்கிறது என்றால் இது எப்பொழுதும் தொடரும்.
 
உறுதியாக சொல்கிறேன் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி உறுதியாக தொடரும் என்பதை இந்த திருமண விழாவில் நான் பகிரகமாக அறிவிக்கிறேன் ஏனென்றால் நாம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கிறோம் என்றால் ஏதோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய தேர்தல் ஆக மட்டுமே அதை நினைத்து விடக்கூடாது அதையும் தாண்டி சொல்கிறேன் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று கூட நினைத்து விடக்கூடாது இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.

CM MK Stalin Speech: ’தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு, இந்தியாவை காப்பாற்ற வேண்டும்’.. வெளுத்துவாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 
இன்றைக்கு சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய பிஜேபி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தற்பொழுது நாம் வந்துள்ளோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் அவர்கள் தலைமையில் கூடி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாவதை முதல் கூட்டத்தை பீகார் மாநிலத்தில் நடத்தினோம். அதற்கடுத்து கர்நாடக மாநிலத்தின் தலைநகரமாக இருக்கக்கூடிய பெங்களூருவில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம் அதில் தான் இந்தியா என்ற பெயரை தேர்வு செய்து கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம் அதற்கடுத்து மூன்றாவதாக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது.
 
அதில் முக்கிய முடிவுகள் எல்லாம் நான் அறிவிக்கயிருக்கிறோம் நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன் ஆகவே தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாவதற்கு எப்படி நீங்கள் எல்லாம் காரணமாக இருந்தீர்களோ அதே போன்று மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று மத்திய அரசு அமைவதற்கு அது நல்ல அரசாக அமைவதற்கு நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் அவர்கள் குறிப்பிட்டார்கள் தொடங்க தான் வந்திருக்கிறேன் நான் எப்போதும் தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தான் தொடங்குவேன் இப்போதும் அதே உணர்வோடு தான் இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறேன் ஒன்பது வருடமாக பிஜேபி ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது இந்த ஒன்பது வருடமாக நாங்கள் ஆட்சிக்கு வந்து இதனை செய்திருக்கிறோம் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறோம் நிறைவேற்றி இருக்கிறோம் சாதனைகளை படைத்திருக்கிறோம் மக்களுக்கு நன்மையை செய்திருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா எதுவும் சொல்ல முடியவில்லை தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னார்கள், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன் என அறிவித்தார்கள் பல கூட்டங்களில் நான் கேட்டேன் நான் மட்டுமல்ல அனைவரும் கேட்டார்கள் 15 லட்சம் தேவையில்லை ஒரு பதினைந்தாயிரம் ரூபாய் கூட தரவில்லை இதுவரை கொடுக்கப்படவில்லை.
 
நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என உறுதிமொழி கொடுத்திருந்தார்கள் அதே நேரத்தில் வேலை வாய்ப்பு மத்திய அரசு மூலமாக வழங்கப்படவில்லை பறிக்கப்பட்டுள்ளது இதுதான் இந்த ஆட்சியின் நிலை ஆனால் இதைப் பற்றி நாம் ஒரு பக்கத்தில் பேசுகிறோம் இதைவிட கொடுமை மதத்தை வைத்து ஆண்டாண்டு மதக் கலவரங்களை உருவாக்கி நாட்டை இரண்டாகின்ற ஒரு கொடியை ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது இதைப் பற்றி எல்லாம் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் இந்தியா என்ற தலைமையில் கூட்டணி நாம் அமைத்துள்ளோம் இது பிரதமரால் தாங்க முடியவில்லை ஆகவே தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் நாடாளுமன்ற சட்டமன்றம் உள்ளாட்சி ஆகிய தேர்தலில் கூட்டணி அமைத்து வழி நடத்திக் கொண்டிருக்கிறோமோ அந்த கூட்டணி தமிழ்நாட்டில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறது அது அனைவருக்கும் தெரியும் அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்த இந்தியா கூட்டணியில் சேர்ந்து இருக்கின்றது.
 
இந்தியா என்கின்ற கூட்டணி உருவாவதற்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த கூட்டணி உருவாக காரணமாக இருக்கிறது என்ற ஆத்திரம் பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு வந்துவிட்டது ஆகையால் தான் எங்கே போனாலும் அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் கொடியேற்று விழா நிகழ்ச்சியாகும் அல்லது பல மாநிலங்களுக்குச் சென்று அங்கே நடத்த இருக்கின்ற அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி வெளிநாடுகளுக்கு போகக்கூடிய முயற்சியாக இருந்தாலும் சரி எங்கு போனாலும் நாம் அமைத்திருக்கக்கூடிய கூட்டணி பற்றி கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திமுகவை பற்றி தொடர்ந்து மோடி கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். தமிழ்நாட்டில் ஊழல் வந்து விட்டதாம் என ஒன்பது வருடமாக மோடி அவர்கள் கூறி வருகிறார்கள் தொடர்ந்து கூறிக் கொண்டு வருகிறார் நான் பிரதமர் மோடியை பார்த்து அடக்கத்துடன் கேட்டுக் கொள்வது ஊழலை பற்றி பேசுவதற்கு யோகிதை பிரதமருக்கு மோடிக்கு உண்டா உங்களுடைய வண்டவாளம் அனைத்தும் சிஏஜி அறிக்கையில் ஆதாரத்துடன் எடுத்து வெளியிடுகிறார்கள். 

CM MK Stalin Speech: ’தமிழ்நாட்டை காப்பாற்றியாச்சு, இந்தியாவை காப்பாற்ற வேண்டும்’.. வெளுத்துவாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிஏஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏழு  திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் போலியாக செல்போன் எண் கொடுத்து 7.5 லட்சம் பயனாளிகளை சேர்த்துள்ளனர். அவர்களின் 88,760 பேர் இறந்துவிட்டனர். ஆனால் இறந்த பின்னரும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, காப்பீட்டுத் தொகை ரூ.22 கோடியே 42 லட்சம் அளவில் மோசடி நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. துவாரகா சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.18 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டி ரூ.250  கோடி  முறையீடு நடந்துள்ளது. அயோத்தியா திட்டத்தில் ரூ.8 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாரத மாதா திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது நாடு முழுவதும் 600 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், அவற்றில் ஐந்து சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்ததில் ரூ.137 கோடியே 5 லட்சம் முறைகேடு நடந்துள்ளது. இதில் பரனூர் சுங்கச்சாவடியும் அடக்கம்.
 
இந்துஸ்தான் திட்டத்தில் 153 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மூலம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய திட்ட நிதி முறைகேடாக மத்திய அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழரை லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு அதிகாரிகள் மீது ஒரு லட்சத்து 17,203 புகார்கள் உள்ளன. இவற்றில் 44 ஆயிரம் புகார்கள் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மீது பதிவாகியுள்ளது. இத்தகைய ஊழல் பின்னணியை வைத்துக் கொண்டுதான் ஊழலை ஒழிக்கப் போவதாக தெரிவிக்கின்றனர். இவர்களது ஊழலை மறைக்கவே திமுக மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறையை விட்டு மிரட்டி பார்க்கின்றனர். இவற்றுக்கெல்லாம்  திமுக அஞ்சாது. நாங்கள் எமர்ஜென்சியை பார்த்தவர்கள். இது பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியும் எதைப் பற்றியும் கவலைப்படாது. இனியும் இந்தியாவை நீங்கள்  ஏமாற்ற முடியாது என்பதை வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் உணர்த்தும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Embed widget