மேலும் அறிய
Advertisement
மரங்கள் இன்றி பாலைவனமாக இருந்த டெல்டாவை சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்! குவியும் பாராட்டு
வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், மற்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர்.
மரங்கள் இன்றி பாலைவனமாக இருந்த டெல்டாவை சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அதிக அளவில் மரங்கள் சூழ்ந்து காணப்பட்ட பகுதியாகும். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கிய கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்ததால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறியது கண்டு மீண்டும் சோலைவனமாக மாற்ற நாட்டு மரக்கன்றுகளை நடும் முயற்சியில் வனம் தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளது.
திருவாரூரில் வனம் தன்னார்வ அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக கலைமணி செயல்பட்டு வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை 15 ஆண்டுகளாக நட்டு வருகிறார். இவருடன் பள்ளி கல்லூரி மாணவர்கள், இதர தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளதாக கலைமணி தெரிவிக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் ஆகிய திருவாரூர் நாகை தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சி அளித்தது. இதனைக் கண்டு வேதனையடைந்த பல்வேறு அமைப்புகள் மனம் தளராமல் மரம் நடும் தங்களது பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பணியை தொடங்கினர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலில் மரக்கன்றுகளை முழுமையாக நட வேண்டும், மேலும் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்தில் நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வனம் தன்னார்வ அமைப்புடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இதர தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.
குறிப்பாக வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், மற்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர். பாலைவனமாக இருந்த இந்த டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றுவதே எங்கள் எண்ணம் என தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் நடப்பட்டுள்ளன குறிப்பாக இயற்கை பேரிடர்களை தாங்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்திருப்பதாகவும் மேலும் பல இடங்களில் குறுங்காடுகள் அமைத்து பாலைவனமாக மாறிய டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றியுள்ளனர் வனம் தன்னார்வ அமைப்பினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion