மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

மயிலாடுதுறை அருகே ஆற்றில் புதிய பாலம் கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீண்டாமை முக்காலம் தொடங்கி இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் படித்து வந்தாலும் இன்றுவரை தீண்டாமை என்பது ஒழிந்த பாடில்லை. தீண்டாமைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராடி வந்தாலும், தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்த பாடில்லை, ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒருவிதத்தில் தீண்டாமை உருமாறும் கோரோனா வைரஸ் போன்று தீண்டாமையும் வெவ்வேறு விதமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் தீண்டாமை என்றால் இரட்டை குவளை முறையை அனைவரது நினைவுக்கும் வரும், தற்போது சற்று வித்தியாசமாக இரட்டைப் பாலம் தீண்டாமை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் மனிதகுலம் நீடித்து இருக்குமா என்ற சூழல் நிலவும் இந்த நிலையிலும் கூட தீண்டாமை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்றால் அது மனிதனின் கொடூர குணத்தை காட்டுகிறது. அவ்வாறான ஒரு செயல்தான் மயிலாடுதுறை அருகே அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் கீழஅக்ரஹாரம் பகுதியில் உள்ள விக்ரமன் ஆற்றில் புதிய பாலம்  கட்ட ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

விக்ரமன் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் இருக்கும் நிலையில் பாலத்தின் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிய  பாலம் கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தொண்டி பணிகள் தொடங்கியது. இதற்கு ஆதிதிராவிடர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். 1997-ஆம் ஆண்டு சடலத்தை தூக்குதல் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு 18 பஞ்சாயத்து ஒன்றுகூடி பொதுவாக இந்த பாலத்தைக்கட்டியுள்ளனர். 

மயிலாடுதுறை: நவீன தீண்டாமை.. இரட்டை குவளை போன்று இரட்டை பாலம்..!

பின்னர், இரண்டு தரப்பு மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஒரு தரப்பு மக்களுக்காக மாற்று பாலம் கட்டினால் மீண்டும் சாதிப் பிரிவினை உண்டாகும். இரட்டை குவளை முறை போல இரட்டைப் பாலம் பலமுறை இந்த கிராமத்தில் உருவாகும் என கூறி, புதிய காலம் பாலம் கட்டும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி நேரில் வந்து பேச்சுவார்த்தை ஈடுப்பட்டு. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags: Mayiladudurai mayiladudurai bridge

தொடர்புடைய செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக உருவாகும் அடர்வனம் : தொடங்கிவைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..!

கொரோனாவால் இறந்தவர்களின் நினைவாக உருவாகும் அடர்வனம் : தொடங்கிவைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்..!

மயிலாடுதுறை: முடங்கிய பிரம்புத்தொழிலால் வேலையிழப்பு : கொரோனாவால் முடங்கிய கிராமத்தின் வாழ்வாதாரம்!

மயிலாடுதுறை: முடங்கிய பிரம்புத்தொழிலால் வேலையிழப்பு : கொரோனாவால் முடங்கிய கிராமத்தின் வாழ்வாதாரம்!

கும்பகோணம் : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

கும்பகோணம் : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

மயிலாடுதுறை : நூற்றாண்டு பழமைவாய்ந்த அரசமரம் விழுந்து 4 வீடுகள் சேதம் : 4 பேருக்கு காயம்..!

மயிலாடுதுறை : நூற்றாண்டு பழமைவாய்ந்த அரசமரம் விழுந்து 4 வீடுகள் சேதம் : 4 பேருக்கு காயம்..!

திருவாரூர் : மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று : 261-ஆக குறைந்தது எண்ணிக்கை..!

திருவாரூர் : மாவட்டத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று : 261-ஆக குறைந்தது எண்ணிக்கை..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?