மேலும் அறிய

திருவாரூர்: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அரசு ஊழியர்கள் வயல்வெளியில் நடக்கும் அவலம்

திருவாரூரில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிலும் மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் வயல்வெளியில் நடக்கும் அவலம்.

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின்புறத்தில் உள்ளது கூட்டுறவு வளாகம். இங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பொதுவிநியோகத் திட்ட அலுவலகம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகம் என ஐந்து அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு கல்லூரி இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் திருவாரூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் நகை மதிப்பீடு கணினி உதவியாளர் மற்றும் கூட்டுறவு சம்பந்தமான கல்லூரி படிப்புகளை 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இங்கு உள்ள ஐந்து அலுவலகத்தில் 120 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினந்தோறும் அலுவலகத்திற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது குறித்த சந்தேகங்களை கேட்பதற்கு வந்து செல்கின்றனர். மேலும் நியாய விலை கடை மற்றும் விவசாய பயிர்க் கடன் குறித்த குறைபாடுகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்பதற்காக நாள் ஒன்றுக்கு 100 பேர் வந்து செல்கின்றனர்.

திருவாரூர்: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அரசு ஊழியர்கள் வயல்வெளியில் நடக்கும் அவலம்

அதேநேரத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வளாகத்திற்கு சாலை வசதி என்பது முற்றிலுமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து அரசிற்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இங்குள்ளவர்களின் வேதனையாக உள்ளது. இதன் காரணமாக கல்லூரி தொடங்கப்பட்டபோது 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது 80 பேர் மட்டுமே பயின்று வருகிறார்கள். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த பணத்தில் 70 ஆயிரம் மதிப்பில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையும் மழைக்காலங்களில் முற்றிலுமாக குறைந்து விடுகிறது. இதனால் பெரும்பாலான மாணவ,மாணவிகள் மற்றும்  ஊழியர்கள் வயல் வெளியில் நடந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் கல்லூரியில் கர்ப்பமான பெண்களும் பயின்று வருகின்றனர் அவர்களும் இந்த வழியில் வருவதால் கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பு உள்ளிட்ட பூச்சிகள் கடித்து பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர்: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அரசு ஊழியர்கள் வயல்வெளியில் நடக்கும் அவலம்

மேலும் கூட்டுறவு வளாகத்தை சுற்றிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுகள் முழுவதுமாக தேங்கி இருக்கிறது. மழை பெய்தால் இந்த சாலையில் நடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த வழி முழுவதுமாக மின்சார வசதி இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையாக தெரிவிக்கின்றனர். உடனடியாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு சாலை அமைப்பதற்கான நிதி குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கூட்டுறவுத்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் புதிய சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget