மேலும் அறிய

விபத்துக்களை தடுக்கணும்... அதுக்கு ரவுண்டானா வேணும்: எங்கு தெரியுங்களா? 

புதுக்கோட்டை உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

தஞ்சாவூர்: வருமா? விபத்துக்கள் தடுக்கப்படுமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக புதுக்கோட்டை உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.


விபத்துக்களை தடுக்கணும்... அதுக்கு ரவுண்டானா வேணும்: எங்கு தெரியுங்களா? 

இந்த தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதி அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் திருச்சிக்கு செல்லும் வாகனங்கள், வல்லத்தில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்துதான் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் இப்பகுதி வழியாக அதிகளவில் சென்று வருகின்றன.

திருக்கானூர்பட்டி நால் ரோட்டில் வேகத்தடை மற்றும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்த நால் ரோடு பகுதியில்தான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து போன்றவை இப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் நடந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் வேகமாக வரும் பேருந்துகள், வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் திருக்கானூர்பட்டி நால் ரோட்டை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான கிராமப் பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் இங்கு நெல், நிலக்கடலை, சோளம், சம்பங்கி பூ, செண்டிகைப்பூ என விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். இந்த சாகுபடி வயல்களுக்கு  தேவையான இடுபொருட்களை விவசாயிகள் தங்களின் இருச்சக்கர வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

மேலும் அறுவடை முடிந்து அவற்றையும் வாகனங்களில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக விவசாயிகள் இருச்சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் வலது புறம் மற்றும் இடதுபுறத்தில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நான்கு புறமும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது.

எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போதும் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் இப்பகுதியில் செல்லும் சரக்கு வாகனங்கள் மிக வேகமாக செல்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சில விநாடிகள் தடுமாறினாலும் விபத்துக்குள் ஏற்படும் நிலை உள்ளது. முக்கியமாக இந்த நால்ரோடு பகுதியில் ரவுண்டானா அமைப்பது மிக தேவையான ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Embed widget