மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை இல்லாத சூழலில், மழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

முன்னதாக கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர்கள், அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆயங்குடி பள்ளம் கிராமத்தில் தண்ணீர் சூழ்ந்த சம்பா, தாளடி பயிர்கள் பார்வையிட்ட தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகை மங்கலத்தில் வெள்ளம் சூழ்ந்த விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம்  குறைகளை கேட்டறிந்தனர்.  பின்னர் அங்குள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள், பாய், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாகவும்,  மாவட்டத்தில் 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும்,  7 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியாகவும் கனமழை காரணமாக சேதமடைந்துள்ளது என்ற விபரத்தினை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் நேரில் ஆய்வு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

கோவை மாணவி தற்கொலை: ஆசிரியர் வீட்டில் ரெய்டு... மாணவி வீட்டிலிருந்த புத்தகங்கள் சேகரிப்பு!

தொடர்ந்து வடிகால் வாய்க்கால்களை தூர்வாரததால் வெள்ள நீர் வடிய வழியின்றி 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் பயிர்களை அழுகி விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பாரதி, முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் சக்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

நிர்வாண குற்றச்சாட்டு: அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனின் கட்சி பதவி பறிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
8 மாத குழந்தையின் நுரையீரலில் ரிமோட் கார் எல்இடி லைட்! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்!
IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
6 ஆண்டாகியும் வெளியாகாத டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Train Cancelled: பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரம் - திருச்சி ரயில் பகுதியளவில் ரத்து - எப்போது வரை தெரியுமா?
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Breaking News LIVE 5th NOV 2024: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம்
Embed widget