மேலும் அறிய

நிர்வாண குற்றச்சாட்டு: அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனின் கட்சி பதவி பறிப்பு!

தீபாவளி பண்டிகையின் போது அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டிற்குள் முழு நிர்வணமாக புகுந்ததாக கூறப்படுகிறது.

மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்ற நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணனின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட அதிமுக அவைத் தலைவராக கோபால கிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார். இவர்  கடந்த 2014 ம்  ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014  முதல் 2019 வரை மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். அதற்கு முன்பாக  இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.  

இந்நிலையில் கடந்த 4 ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டிற்குள் முழு நிர்வணமாக புகுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் உள்ள இடத்தில் முழு நிர்வணமாக வந்தது குறித்து கோபி எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணனை கோபி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்திய காவல் துறையினர் வீட்டிற்குள் குடி போதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல கோபால கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணன் நிர்வணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளை கோபி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன் மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து கோபாலகிருஷ்ணனை நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (08-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Embed widget