மேலும் அறிய
Advertisement
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாதான் அ.தி.மு.கவை காப்பாற்றினார் - சீமான்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாதான் அதிமுகவை காப்பாற்றினார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்வதற்கு சசிகலாவே காரணம். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும் என குறிப்பிட்டார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டல மாவட்டங்கள் அடங்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன்கபீர் மாவட்ட செயலாளர் வேதாபாலா, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சர்வத்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராம.அரவிந்தன் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை தாங்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். கூட்டத்தி ல் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில்,மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் செந்தில் நன்றி கூறினார். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது... ”அ.தி.மு.க என்ற கட்சி இருக்கிறதா? இயங்குகிறதா? என்றே தெரியவில்லை. அ.தி.மு.க எதிர் கட்சிக்கான வேலையை செய்யவில்லை.
காவல் நிலைய மரணம் குறித்த வழக்கில் ஆளுங்கட்சியான தி.மு.க இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்ட தி.மு.க தற்போது மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை அடக்குகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா தான் அ.தி.மு.கவை காப்பாற்றினார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்வதற்கு சசிகலாவே காரணம். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும் என குறிப்பிட்டார். நீதிபதிகள் மக்களுக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்கள் போல் பேசக்கூடாது. நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பதவிகளும் பொறுப்புகளும் அந்த நீதிபதிகள் பதிவியில் இருந்த போது அந்த அரசுகளுக்கு சாதகமான செயல்களை செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. டெல்லியில் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல, இது மக்களுக்கான பிரச்சனை 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
பா.ஜ.க வினருக்கு வேலை இல்லாததால் அண்ணாமலை உள்ளிட்டோர் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க ஆதரிக்கும் மேகதாட்டு அணையை எதிர்த்தும், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையுவர்வை எதிர்த்தும் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எதிர் கட்சியாக இருந்த போது கருத்து சுதந்திரம் குறித்து பேசிய தி.மு.க தற்போது ஆளும் கட்சியான பிறகு கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிகின்றனர் என்றும் சீமான் தெரிவித்தார். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காரணம். தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் பா.ஜ.க உண்மையில் தேசத்திற்கு எதிரான கட்சியாகும். தேசத்தின் சொத்துக்களை கூறு போட்டு விற்று வருகிறது. சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத ஒரு நாடு என்றால் அது இந்தியாதான்” என்றார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion