மேலும் அறிய
Advertisement
ரேஷன் கடைகளில் கைரேகை பிரச்னையால் வாக்குவாதம் - சர்வர் பிரச்னையால் சிக்கி தவிக்கும் ஊழியர்கள்
கைரேகை இயந்திரம் இயங்காத காரணத்தினால் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நியாயவிலைக் கடைகளில் கைரேகை இயந்திரம் செயல்படாத காரணத்தினால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை.
தமிழ்நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், கைரேகையை வைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்களில் யாரேனும் ஒருவர் கைரேகையை வைத்து, குடும்ப அட்டைக்கு உரிய பொருட்களை பெற்றுச் சென்று வந்தனர். இன்னிலையில் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை இயந்திரம் சரியான முறையில் செயல்பட காரணத்தினால், தற்காலிகமாக அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு எப்பொழுதும் போல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும், கைரேகையை வைத்து பொருட்கள் பெற்று செல்ல வேண்டுமென உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் யாரேனும் ஒருவர் பொருட்களை பெற்று செல்லலாம், மேலும் முதியவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர முடியவில்லை என்றால் அவர்களுக்கு பதிலாக வேறு யாரேனும் ஒருவர் ரேஷன் பொருள்களை பெற்றுச் செல்லலாம் எனவும் உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 169 அரிசி குடும்ப அட்டைதாரர்களும் 630 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், 6565 முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைதாரர்கள், உட்பட 3 லட்சத்து 81 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் பொழுது சர்வர் பிரச்சினையின் காரணமாக கைரேகை வைக்கும் இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ஒரு நாளைக்கு முன்பு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கி வந்த நிலையில், தற்பொழுது கைரேகை இயந்திரம் இயங்காத காரணத்தினால் ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, நியாய விலை கடை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகுவதாகவும், நியாய விலை கடை பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்காலிக தீர்வாக சர்வர் பிரச்சினை தீரும் வரை கைரேகை வைக்காமல் பொருட்கள் பெற்றுச் செல்லலாம் என்ற அறிவிப்பை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும், இல்லை என்றால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் உரிய தீர்வு காண வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion