மேலும் அறிய

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு, போதுமான களிமண் கிடைக்காததால் மண் பாண்ட தொழில் மந்தமாகியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணிக்கு, போதுமான களிமண் கிடைக்காததால் மண் பாண்ட தொழில் மந்தமாகியுள்ளது என தஞ்சை மாவட்ட பகுதியில்,  மண்பாண்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பொங்கல் திருவிழாவாகும். இந்த பொங்கல் விழாவின் போது தமிழர்கள் தங்களுடைய வீடுகளில் மண்பானை கொண்ட புதிய பானைகளை வைத்து அதில் வெண் மற்றும் சர்க்கரை பொங்கலிட்டு படைப்பது வழக்கம். இதற்காக புதிய மண் அடுப்புகளையும் வாங்கி அதில் தான் பொங்கலிடுவார்கள். இதையொட்டி மண் அடுப்புகள் தயாரிப்பு பணி தஞ்சை மாவட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது.

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

இந்த மண்பாண்ட பொங்கல் அடுப்புகள் தயாரிப்பதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட  மண்பாண்ட தொழில் செய்யும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண்அடுப்புகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வந்தாலும், போதுமான மண் கிடைக்காததால், கிடைத்துள்ள சொற்ப மண்ணில் அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு மண்களை அள்ளக்கூடாது என்று தடைவிதித்துள்ளதால், மண் கிடைக்காமல் விலை அதிகம் கொடுத்து மண் வாங்கி அடுப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மண் பாண்டத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். இதே நிலை நீடித்தால் மண்பாண்டதொழில் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளா்கள் கணக்கீட்டு அவா்களுக்கு, உரியஅடையாளங்களை வழங்கி மண் எடுப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

இதுகுறித்து மாத்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில்,பொங்கல் பண்டிகையில் புதிய மண்பாண்ட அடுப்பில் தான் பொங்கல் வைப்பார்கள். அதற்காக அடுப்புகள் தயாரித்து வருகிறோம். இந்த அடுப்புகள்  100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனைக்கு வர உள்ளது. எங்களிடம் ஒற்றை அடுப்பு, தொட்டி அடுப்பு, இரட்டை அடுப்பு, ஒரு வாய் அடுப்பு, 5  கொண்டை அடுப்புகளை தயார் செய்கின்றோம். இதற்காக களிமண், மணல், கூழம் ஆகியவைகளை கொண்டு பிசைந்து, தட்டி அடுப்பு செய்வோம், பின் அதனை வரட்டி, தேங்காய்மட்டை, மரத்துாள், வைக்கோல், கூழம் கொண்டு தீயிட்டு கொளுத்துவோம். பின் அதனை வியாபாரம் செய்வோம். இந்நிலையில்  தற்போது அரசு மண் எடுக்ககூடாது என்று அறிவித்துள்ளதால், மண் கிடைக்காமல் எங்களின் மகன்களும் நானும்  வேறு தொழிலுக்கு சென்று விட்டனா்.  எனது மனைவி மட்டும் கிடைக்கும் மண்ணில் அடுப்பு செய்து வருகிறார்.

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு  பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்பாண்டம் செய்து வந்தனா்.  ஆனால் அரசு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் நிபந்தனை இருப்பதால் மண் கிடைப்பது அரிதாகி உள்ளது. மேலும் வயிற்று பிழைப்பிற்கு வேறு தொழில் தெரியாததால், அனுதியின்றி மண் அள்ளுபவர்களிடம் மண்ணை, அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் வைக்கோல்கள் வெளி மாவட்ட, மாநிலத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதால், அடுப்புகளை தயாரிக்க முடியாத நிலை உள்ளது.  தற்போது வீடுகளில் எவா்சில்வா், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்கள் வந்ததால், மண்ணினால் செய்த பொருட்களுக்கு மவுசு இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது இயற்கை உணவிற்கு மாறிவருவதால் மண்பாண்டத்திற்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால் மண் கிடைக்காததால் பெரும் வேதனையாகியுள்ளது.

மண் எடுப்பத்தில் அரசின் நிபந்தனையால் தஞ்சையில் அரிதாகிவரும் மண்பாண்டத் தொழில்

காவிரி, வெட்டாறு, வெண்ணாறு கரைகளில் அனுமதியின்றி செங்கல் சூலை வைத்து லட்சக்கணக்கான எண்ணிக்கையில் செங்கல் தயார் செய்கின்றனா். அவா்களை எல்லாம் தமிழக அரசு விட்டு விட்டு, எங்களை போன்ற பாரம்பரியமாக தொழில் செய்து வருபவா்களை சிரமப்படுத்துவது வேதனைக்குரியதாகும். எனவே மாவட்ட நிர்வாகம் மண்பாண்ட தொழிலாளா்களை  சரியான முறையில் ஆய்வு, அவா்களை அறிந்து அவா்களுக்கு என்று அடையாள அட்டையை வழங்கி மண் எடுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் மண்பாண்டத்தொழில் முற்றிலும் பாதிக்கும். இதனால் மீதமுள்ள பல மண்பாண்டத்தொழிலாளா்கள் வேறு தொழிலுக்கு மாறும் அவல நிலைஏற்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Last day Of The Year 2024: ஆண்டின் கடைசி நாள்..! 2024-ஐ எப்படி வழியனுப்பலாம்? இதை சொல்லி பாருங்களேன்..!
Last day Of The Year 2024: ஆண்டின் கடைசி நாள்..! 2024-ஐ எப்படி வழியனுப்பலாம்? இதை சொல்லி பாருங்களேன்..!
Breaking News LIVE: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்ட்டாட்டம்! கண்ணாடி பாலத்தை திறந்த வைக்கும் முதலமைச்சர்!
Breaking News LIVE: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்ட்டாட்டம்! கண்ணாடி பாலத்தை திறந்த வைக்கும் முதலமைச்சர்!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Embed widget