மேலும் அறிய
Advertisement
மன்னார்குடி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்; எம்.எல்.ஏ., ராஜா வழங்கினார்!
ஜனநாயக மக்கள் அறக்கட்டளை மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இணைந்து மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் வழங்கப்பட்டது.
மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா முயற்சியால் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 50 ஆக்சிசன் செறிவூட்டல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மத்திய பல்கலைக்கழகம் திருவிக அரசு கலைக்கல்லூரி இதேபோன்று மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நன்னிலம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 529 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் நேற்று வரை 30,320 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 25 ஆயிரத்து 471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 646 நபர்கள் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 197 நபர்கள் உயிரிழந்துள்ளனர் நேற்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் குடவாசல் மருதுவாஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் .
குறிப்பாக தொற்று பாதித்தவர்களின் அதிகமானவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. ஆகையால் அவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் வசதி பெற வேண்டி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 75 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இருந்தன. மேலும் 75 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி.ராஜா ஏற்படுத்திக்கொடுத்தார். இந்நிலையில் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் தேவை அதிகமானது.
அதனையடுத்து ஜனநாயக மக்கள் அறக்கட்டளை மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இணைந்து மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் வழங்கனார்கள்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைக்கு பெற்று வருபவர்களை பாதுகாத்து உயர் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 50 ஆக்சிசன் செறிவூட்டல் இயந்திரங்கள் மன்னார்குடி சட்டமன்உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மூலம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் கோவிந்தராஜனிடம் வழங்கப்பட்டது.
உடலுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வரும் நோயாளிகளை திருவாரூர்,தஞ்சை போன்ற பகுதிகளுக்கு அனுப்பாமல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.
மேலும் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிகமாக மருத்துவர்கள் செவிலியர்கள் ஆய்வக ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்த நேரத்தில் சிகிச்சைக்கு வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion