மேலும் அறிய
Advertisement
மேகதாது அணை கட்டுமானம்; பி ஆர்.பாண்டியன் முதல்வருக்கு கடிதம்
மேகதாட்டு அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்டி முதலமைச்சர் விவாதிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி ஆர்.பாண்டியன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்
மேகதாது அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்டி முதலமைச்சர் விவாதிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி ஆர்.பாண்டியன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைந்து கூட்டி மேகதாதுவில் அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவசர கடிதத்தை அனுப்பி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது..
‛‛கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதற்கு சட்டவிரோதமாக முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடக சட்டமன்றத்தில் ரூபாய் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மேகதாது அணை கட்டுமானப் பணி துவங்கி விட்டதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்தார். உடனடியாக இதனை எதிர்த்து கர்நாடக பகுதியை முற்றுகையிட மேகதாது கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகளோடு சென்றோம்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி என் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மேகதாட்டு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அதிர்ச்சி அடைந்தோம். அங்கு அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது, சாலைகள் அமைக்கும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது நேரில் அறிந்து கொண்டோம். ஆதாரத்தோடு புகைப்படமும் செய்திகளும் வெளியிட்டதையடுத்து கடந்த 25ஆம் தேதி தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் பத்திரிக்கைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் தானே வழக்குப்பதிவு செய்து ஜூலை 5 ஆம் தேதிக்குள் அறிக்கை தருவதற்கான வகையில் ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து உத்திரவிட்டுள்ளது. கர்நாடகம் அணை கட்டுமான பணி சட்டவிரோதமானது என்பதை பசுமை தீர்ப்பாய நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்றையதினம் கூட்டியிருக்கிறார். மேகதாது அணை கட்டுமான பணியை கர்நாடகம் மேற்கொண்டால் தமிழகம் அழிந்து போகும்.எனவே தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக கூட்டி அனைத்து கட்சிகள் விவசாயிகளை ஒருங்கிணைத்து தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் மூலம் மாவட்ட ஆட்சியர் வழியாக அனுப்பி வலியுறுத்தி இருக்கிறேன். அவர் உடனடியாக கூட்டுவார் என்று நம்பி எதிர்பார்த்து இருக்கிறோம்,’’ என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion