மேலும் அறிய

அதிர்ச்சி! ஒரு மாத கால நெற்பயிரை டிராக்டரை ஏற்றி அழித்த விவசாயி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைவால் போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்து கருகிய பயிர்களை விவசாயி டிராக்டர் கொண்டு அளித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டம் மயிலாடுதுறை, இங்கு விவசாய தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும், காவிரி நீர், மழை , நிலத்தடி நீர் என மூன்று வழிகளில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதிகளில் விவசாய தொழில் நடைபெறுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 22,000 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

அதிர்ச்சி! ஒரு மாத கால நெற்பயிரை டிராக்டரை ஏற்றி அழித்த விவசாயி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

நீர் பற்றாக்குறை:

காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீரைக் கொண்டு மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆற்றில் நீர்வரத்து இல்லாமை மற்றும் இயல்பைவிடக் குறைந்த மழைபொழிவு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்ததால் பயிர்கள் கருகி நாசமாகியது. 

Cricket In Worldcup: இந்திய ரசிகர்கள் உற்சாகம்..! 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்ப்பு

அதிர்ச்சி! ஒரு மாத கால நெற்பயிரை டிராக்டரை ஏற்றி அழித்த விவசாயி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

பயிர்கள் கடும் பாதிப்பு:

பொன்னூர் கிராமத்தில் விவசாயி அகோரம் என்பவரது நிலத்தில் பச்சைப்பாசி படர்ந்ததன் காரணமாக நெற்பயிர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தது. இந்த பயிர் பாதிப்பினை ஸ்டாமின் இயக்குநர் பி.சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் சேகர் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன் தலைமையில் பயிர் நோயியல் துறை, உழவியல் துறை, மண்ணியல் துறை விஞ்ஞானிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். மேலும், இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தாலுகாக்களில் பச்சைப்பாசி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Navratri Festival: பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்; இன்று முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம்

அதிர்ச்சி! ஒரு மாத கால நெற்பயிரை டிராக்டரை ஏற்றி அழித்த விவசாயி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

அழிப்பு:

இந்த சூழலில், ஒரு மாதத்துக்கும் மேலாக வளர்ந்து, பின்னர் கருகிய பயிர்களை விவசாயி அகோரம் இன்று  டிராக்டர் கொண்டு உழுது அழித்தார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு மழை பெய்யும்பட்சத்தில்,  நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதனால் போர்வெல் தண்ணீரில் பச்சைப்பாசி பாதிப்பு நீங்கும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் நடவுப்பணியை மேற்கொள்ள உள்ளார் விவசாயி அகோரம்.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருமாத காலம் வளர்ந்து கருகிய பயிரை விவசாயி அகோரம் அழித்த நிகழ்வு அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‌.

Rajinikanth - Vijay: “மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்” - லியோ குறித்து நடிகர் ரஜினிகாந்த் திடீர் பேட்டி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget