மேலும் அறிய

காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 2 கட்சிகளும் உள்ளன... எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தகவல்

அனைத்து கட்சிகளும் தங்களை பெருமையாகவும், துாக்கி உயர்த்தி பேசுவதும் தமிழக அரசியலில் வாடிக்கை தான்.

தஞ்சாவூர்: காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி,  நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாள சின்னம் எல்லா இடத்திலும் சென்று அடைந்துள்ளது. அ.தி.மு.க.,வை நான் குறைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களிடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை. 

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தனர். அ.தி.மு.க.,வின் தலைமையின் கீழ்தான் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்து என்றால் கூடவும், முடிவெடுக்க வேண்டும் என்றால் கூட டில்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.,வை நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., இருக்கிறது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். 

அனைத்து கட்சிகளும் தங்களை பெருமையாகவும், துாக்கி உயர்த்தி பேசுவதும் தமிழக அரசியலில் வாடிக்கை தான். ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், த.வெ.க.,வில் சேர்ந்த நிலையில், அந்த கட்சியோட பெருமைகளை அவர் பேச வேண்டிய நிலையில் உள்ளார். த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாக மாறினதா என்றால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது ஒரு ரசிகர் மன்றம் போலதான் நடக்கிறது. த.வெ.க.,வில் உத்தரவு போட்டு, கட்டுபடுத்தும் வடிவம் கிடையாது. ஒரு மாவட்டத் தலைவரோ, செயலாளரோ அவர் கட்டுப்பாட்டுல செயல்படக்கூடிய அமைப்பு இல்லை. 

விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் ஓட்டுகள் எல்லாம் சீட்டுகளாக மாறுமா என்ற கேள்விக்குறிதான். அரசியல் கட்சி துவங்கி கோட்டையில் கொடி ஏற்றுவது என்பது நீண்ட பயணம். இதற்கு பல்வேறு காரணிகளை பின்பற்ற வேண்டும். 

ஓ.பி.எஸ்., தி.மு.க.,வில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யமாக தான் நான் பார்க்கிறேன். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது தேர்தலைச் சந்திக்க, ஒரு பெரிய கூட்டணியை அமைப்பதுதான் வெற்றிகரமான அரசியலாக இருக்கும். அதிலும் ஆளும்கட்சியாக இருக்கும் போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களைக் கூட  பெரியமனது செய்து, அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்குக் கிடைத்த வெற்றி.

அனைத்து கட்சிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 234 தொகுதி தான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே கிவ் அண்ட் டேக் பாலிசில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன். அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாக கண்டிக்கிறேன். ஈரான் மக்களுக்காக எனது அனுதாபம் இருக்கு. அவர்கள் இந்த போரில் மட்டும் அல்ல, உள்நாட்டிலேயே அங்குள்ள மக்கள் நசுக்கப்பட்டார்கள்.  விலைவாசிக்கு எதிராக  நடந்த போராட்டத்தில் 7,000 பேர் இறந்துள்ளனர். அது அந்தநாட்டின் அரசாங்கம் செய்த கொடூரம். நான் என்றைக்கும் தலிபானுக்கோ, அயதுல்லாவுக்கோ வக்காலத்து வாங்க மாட்டேன் என தான் சொன்னேன். அமெரிக்கா நடத்தும் போரை நியாயப்படுத்தவில்லை ஈரான் அரசின் கொடுமையை படிக்க வேண்டும். 

வரும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இடத்தில் தி.மு.க., உள்ளது. ஒவ்வொரு கட்சியுடன் பேசி அவர்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இரண்டு கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் பெரிய தாக்கம் இருக்காது. அவர்களின் நேரம் எல்லாம் முடிந்து விட்டது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கு சென்று விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி
தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி
தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
பேருந்து வசதி வேண்டி மக்கள் மனு! 20 வருட கனவு நிறைவேறுமா? தஞ்சை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget