மேலும் அறிய

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்

கர்நாடக அரசிடமும் தமிழக அரசு காவிரி நீரை பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தஞ்சாவூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை வரும் 16ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம்.

தஞ்சாவூர்: கர்நாடக அரசிடமும் தமிழக அரசு காவிரி நீரை பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து தஞ்சாவூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை வரும் 16ம் தேதி முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபடுவது என்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார். 

காவிரி உரிமைப் மீட்பு குழு அவசர கூட்டம் 

தஞ்சாவூரில் காவிரி உரிமைப் மீட்பு குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். பொருளாளர் த.மணிமொழியன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன், ஐஜேகே மாவட்டச் செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் திறக்கப்படாததால் நிலங்கள் தரிசாகிறது

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பெ.மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜூன் 12 ம் தேதி திறக்கவேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேட்டூர் அணை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு  இதுவரை சொல்லவில்லை.


வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்

கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற வேண்டும்
 
கர்நாடகத்தில் பருவமழை நன்றாக பெய்து தண்ணீர் அங்குள்ள அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் விகிதப்படி நமக்கு உள்ள தண்ணீரை தமிழக அரசு கர்நாடக அரசிடம் கேட்டு பெற  வேண்டும். விகிதப்படி முழு அளவு இருந்தால் என்ன கிடைக்குமோ அதுவல்ல. பகுதி அளவு இருந்தால் கூட அதுக்குள்ள விகிதப்படி தண்ணீரை வாங்க வேண்டும். மேட்டூர் அணையை இந்த ஆண்டு பாசனத்துக்கு திறக்காததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து பேரிடர் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நடுநிலை தவறிய காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது நடுநிலை தவறி இருக்கிறது. நடுநிலையோடு செயல்படவில்லை. அதற்கு கொடுத்த அதிகாரத்தை செயல்படுத்தவில்லை. நடுநிலை தவறிய ஆணையம். அந்த தலைவர் ஹைதர் நடுநிலை தவறிய நபர் என்று நாங்கள் காவிரி உரிமை மீட்புக்குழு நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லுகிறோம். அந்த நபர் கல்லணைக்கு வந்த போது கருப்புக்கொடி காட்டி கைதாகினோம்.

கர்நாடக அரசு அங்கு அணைகள் மட்டுமில்லாது, ஏராளான ஏரிகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு குழுவை நியமித்து அங்குள்ள அணைகளை ஆய்வு செய்யவேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டங்கள் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக, கர்நாடகாவில் உள்ள அணைகளை ஆய்வு செய்த பின் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.

டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு

இந்தாண்டு தண்ணீர் இல்லாத காரணத்தால் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியும் கேள்வி குறியாக உள்ளது. மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும் தமிழக அரசு காவிரி நீரை பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 

இதனை கண்டிக்கும் விதமாக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தஞ்சாவூரில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை ஜூலை 16ம் தேதி முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவுக்கு ரூ.4 ஆயிரம் ரொக்கமாக வழங்குவதை கைவிட்டு, கடந்த காலங்களில் வழங்கியபோது போன்று உரமாக வழங்க வேண்டும்.

குறுவைக்கு பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரி நீர் வராத காரணத்தால் பல கிராமங்களில் விவசாயம் செய்யப்படவில்லை. விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget