மேலும் அறிய

தஞ்சாவூரில் தொடங்கிய குடை மிளகாய் சீசன் - விளைச்சல் அமோகத்தால் விற்பனை மும்முரம்

சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால்,உடலில் சர்க்கரை அளவுக் குறையும்.

சீசன் தொடங்கியதால் தஞ்சை குடை மிளகாய் விற்பனைக்கு வருகை.  தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் மட்டும் விளையும் குடை மிளகாய் சீசன் தொடங்கியதால், விற்பனைக்காக வந்துள்ளது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலானோர் பழைய சோறும், மிளகாய் வற்றலை வறத்து சாப்பிடுவார்கள். இதனால் உடலில் வெப்பம் தணியும். அனைத்து வகையான மிளகாய்கள் இருந்தாலும், தஞ்சை குடை மிளகாய், பழைய சோறுக்கும் இணையாகாது. இதனால் தஞ்சை மாவட்டம் இல்லாது, வெளி மாவட்ட, மாநில, நாடுகளுக்கும், அவர்களது உறவினர்கள் தேடிப்பிடித்து பக்குவப்படுத்தி, குடைமிளகாயை வாங்கி பதப்படுத்தி அனுப்பி வைக்கும் பழக்கும் காலம்காலம் தொட்டு இன்றளவும் நடக்கிறது.

கோடை காலத்திற்கேற்ற குடை மிளகாய், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கானுார்பட்டி, செல்லம்பட்டி, மஞ்சப்பட்டி, வல்லம், மருங்குளம்  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் மானாவாரி நிலத்தில் குடை மிளகாய் விளையக்கூடியதாகும். கடந்த மார்கழி மாத பட்டத்தில் நடவு செய்து, தற்போது செடிகள் வளர்ந்து, குடை மிளகாய் காய்த்துள்ளது. இது போல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் குடை மிளகாய் சீசன் தொடங்கும். இங்கு விளையும் குடை மிளகாய்கள் தமிழகம் மட்டுமில்லாது, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சீசன் தொடங்கிய நிலையில் தஞ்சையில் சாகுபடி செய்து விளைந்த குடை மிளகாய்  தஞ்சை மாவட்டம் முழுவதுமுள்ள பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூரில் தொடங்கிய குடை மிளகாய் சீசன் - விளைச்சல் அமோகத்தால் விற்பனை மும்முரம்

பொதுமக்கள், குடை மிளகாயை வாங்கி வந்து உலர்த்தி, காயவைத்து  குடை மிளகாயில் துளையிட்டு, மோரில் ஊறவைத்து மீண்டும் வெயிலில உலர்த்தி வைத்து பதப்படுத்தி விடுவார்கள். இது போல் பக்குவமாக செய்தால், ஓராண்டு ஆனாலும் கெட்டு போகாமலும் சுவையாக இருக்கும். கடந்தாண்டு சீசன் நேரத்தில் கிலோ  80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சீசன் தொடங்கிய நிலையில் அதிக வரத்து இருப்பதால் தற்போது கிலோ குடை மிளகாய் 50 விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது மழை அதிகமாக பெய்துள்ளதால் குடை மிளகாய் அதிக வரத்து இருந்தால் குடை  மிளகாய் விலை  30 ரூபாய் வரை குறையவதற்கு வாய்ப்புள்ளது என மிளகாய் வியாபாரி தெரிவித்தார். இது குறித்து குடை மிளகாய் விவசாயி கூறுகையில்,குடைமிளகாயை உணவில் நாம் அதிகமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. குடை மிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இவை அனைத்தும் குறைவாகவே உள்ளது எனவே, குடை மிளகாய் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. கலோரிகள் குறைந்தால் உடல் எடை வேகமாக குறையும்.


தஞ்சாவூரில் தொடங்கிய குடை மிளகாய் சீசன் - விளைச்சல் அமோகத்தால் விற்பனை மும்முரம்

குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அதிகமாகவே உள்ளதால், வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை ஏற்படுகிறது. நம் தோலில் ஏற்படும் கருமை, வறட்சி, சுருக்கம் ஆகியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.மூட்டு வலிக்கி நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால்,உடலில் சர்க்கரை அளவுக் குறையும்.


தஞ்சாவூரில் தொடங்கிய குடை மிளகாய் சீசன் - விளைச்சல் அமோகத்தால் விற்பனை மும்முரம்

கண்களுக்குத் தேவையான முக்கியமான சத்தான விட்டமின் எ குடை மிளகாயில் அதிகமாகவே உள்ளது. எனவே, இதனை குழந்தைகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம். அவ்வாறு சிறு வயதில் இருந்தே கொடுப்பதனால் இளம் வயதிலே கண் தொடர்பான பிரச்சணைகளை அண்டவிடாமல் தடுக்கும்.  குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். குடைமிளகாயை உணவில் சேர்த்தால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும் என்றார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget