ABP NADU IMPACT: சாதி சான்றிதழ் இன்றி தடைப்பட்ட கல்வி; ஆட்சியரின் அதிரடி உத்தரவால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி
இந்த செய்தியை கண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
![ABP NADU IMPACT: சாதி சான்றிதழ் இன்றி தடைப்பட்ட கல்வி; ஆட்சியரின் அதிரடி உத்தரவால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி ABP NADU IMPACT Mayiladuthurai collector ordered to issue caste certificate immediately - TNN ABP NADU IMPACT: சாதி சான்றிதழ் இன்றி தடைப்பட்ட கல்வி; ஆட்சியரின் அதிரடி உத்தரவால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/b2d973b1854f1d8d1b37ac3f32f63e381702383048969733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆத்துக்குடியில் ஜாதி சான்றிதழ் இன்றி பட்டியலின் மக்களின் படிப்பு பாதிக்கப்படுவது குறித்த செய்தி ஏபிபி நாடு தளத்தில் செய்தி வெளியானதை அடுத்து ஆட்சியர் சாதி சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தர்மதானாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்குடி மெயின் ரோட்டில் சுமார் 10 குடும்பத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் நான்கு தலைமுறைக்கு மேலாக இப்பகுதியில் வசிக்கின்றனர். இவர்களின் மூதாதையர்கள் காட்டுப்பகுதியில், மலைப்பகுதியிலும் தங்கள் வாழ்க்கையை நடத்தி அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்ந்துள்ளனர்.
Ennore Oil Spill: கச்சா எண்ணெயை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
இவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் காட்டு பகுதிகளில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இந்த இருளர் இன மக்கள் நகரத்தை நோக்கி வந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைக்கு பல்வேறு வகையான கூலி வேலைகளுக்கு சென்று அவர்களின் வாழ்கையை கடந்துகின்றனர். இந்த சூழலில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க அனைத்து வசதிகள் இருந்தும், ஜாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்க முடியுமா பாதியில் நிறுத்தி விட்டு கூலி தொழிலை நோக்கி அழைத்துச் செல்வதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும், ஓட்டு போடுவதற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் என அனைத்தும் இருந்தும், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் மட்டும் கிடைக்கவே இல்லை எனவும், இது தொடர்பாக பலமுறை தாலுக்கா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து இடங்களுக்கும் சென்றும் தங்களுக்கு பலன் இல்லை என ஆதங்கம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அரசு அலுவலர்கள் தங்களை உதாசீன பொருளாக நினைத்து அலைகழித்து விடுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
தற்பொழுது தங்களது வாழ்க்கை ஜாதி சான்றிதழ் இல்லாமல் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் படிப்பு இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது சிரமம் என்பதை உணர்ந்து தங்களின் குழந்தைகளை படிக்க வைத்தாலும், பள்ளியில் பாதி தூரம் சென்ற நிலையில் இந்த ஒரு ஜாதி சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் இருந்து வெளியேற்றி விடுவதாகவும், இதனை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஏபிபி நாடு செய்தி தளம் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த செய்தியை கண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)