Entertainment Headlines: ரஜினியின் மேஜிக் மொமெண்ட் முதல் அனிமல் படத்தை வச்சு செய்த நெட்டிசன்ஸ் வரை... சினிமா ரவுண்டப்!
Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 12ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
பாலச்சந்தரை இம்ப்ரெஸ் செய்த பையன்: சிவாஜி ராவ் ரஜினிகாந்தான மேஜிக் மொமெண்ட் - கமல் பகிர்ந்த ஸ்டோரி
இன்று தமிழ் சினிமாவே சூப்பர் ஸ்டார் என நடிகர் ரஜினிகாந்தை கொண்டாடி தீர்க்கிறார்கள். ஆனால் அவருக்கு இந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்ததற்கு பின்னால் மிகவும் போராட்டம் கலந்த ஒரு கடினமான பயணம் இருந்துள்ளது. பெங்களூரில் சிவாஜி ராவாக பிறந்தவருக்கு சிறு வயது முதலே கலை மீது அளவு கடந்த காதல் இருந்தது. இருப்பினும் தனது சூழ்நிலையால் பல கூலி வேலைகளை செய்து வர பின்னர் பஸ் கண்டக்டராக பணிபுரிந்த போதிலும் தொடர்ந்து நாடங்ககளில் நடித்து வந்தார். மேலும் படிக்க
HBD Rajinikanth: அன்பிற்கினிய சூப்பர் ஸ்டாருக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் தனுஷ் வரை.. ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்..
கோலிவுட் தாண்டி உலகம் முழுவதும் தனது தனித்துவமான ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள இந்திய சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth). இந்திய சினிமா உலகில் 47 ஆண்டுகளைக் கடந்து, தனக்கென தனி பாதை அமைத்து, மூன்று தலைமுறை ரசிகர்கள் தொடர்ந்து கவர்ந்து என்றென்றும் சூப்பர் ஸ்டாராய் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இன்று தன் 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மேலும் படிக்க
Muthu - Aalavandhaan: முத்து Vs ஆளவந்தான் ரீரிலீஸ்.. ரேஸில் இந்த முறை ஜெயித்தது யார்? வசூல் நிலவரம்!
உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழகமே கொண்டாடித் தீர்க்கும் இரு ஸ்டார் நட்சத்திரங்கள் இன்றளவும் அதே கம்பீரத்துடனும் அதே சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருவதுடன், அவர்களின் மார்க்கெட்டையும் சற்றும் இழக்காமல் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் உலகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் படிக்க
HBD Rajinikanth : நீ ஒருவன்தான் அழகு.. ரஜினியை எப்படி எல்லாம் ரசிக்கலாம் தெரியுமா?
ரஜினிகாந்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசிக்கலாம். மாஸான கமர்ஷியல் நடிகராக ஒரு பக்கமும் உணர்ச்சிகரமான நடிகராக மறுபக்கம் என ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய வித்தியாசத்தைப் பார்க்கலாம். ஒரு டை ஹார்ட் ரஜினி ரசிகர் ரஜினியிடம் என்னவெல்லாம் ரசிப்பார் என்று பார்க்கலாம்! மேலும் படிக்க
Animal: இடைவேளைக் காட்சி அப்பட்டமான காப்பி.. ‘அனிமல்’ படத்தை துவம்சம் செய்யும் நெட்டிசன்கள்!
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிமல் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தன் தந்தையின் மீது அதீத அன்பு வைத்திருக்கும் கதாநாயகன் தொடர்ச்சியாக அவரால் நிராகரிக்கப்படுகிறார். அதே தந்தையின் உயிருக்கு ஆபத்து வரும்போது கதாநாயகன் எந்த எல்லைவரை செல்கிறார் என்பதே அனிமல் படத்தின் கதை. உணர்ச்சிவசமான ஒரு கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு கேங்ஸ்டர் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. மேலும் அவரது முந்தையப் படமான அர்ஜூன் ரெட்டியைப் போல் அனிமல் படமும் பலவிதமான சர்ச்சைக்குரிய விஷயங்களை உள்ளடக்கி இருப்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் படிக்க