Cars Discontinued in 2024: மெர்சிடஸ் முதல் ஃபோர்ட் வரை: இந்த வருஷத்தோட இந்த கார் உற்பத்தி எல்லாம் காலி! லிஸ்ட் இதோ
Cars Discontinued in 2024: 2023ம் ஆண்டுடன் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வெவ்வேறு மாடல் கார்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளன.
Cars Discontinued in 2024: 2023ம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட உள்ள கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நிறுத்தப்படும் கார் உற்பத்தி:
ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுவது போலவே, சில மாடல்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதும் தவிர்க்க முடியாதது. அந்த வகையில், 2024 மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளன. பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை மின்மயமாக்குவதற்கான இலக்குடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் விளைவாகவே பல கார் மாடல்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தெரிகிறது. அந்த வகையில் 2024 மற்றும் அதற்கடுத்த ஆண்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட உள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உற்பத்தி நிறுத்தப்படும் கார் மாடல்கள்:
AUDI R8: 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடியின் R8 சூப்பர் கார் உற்பத்தி 2023டன் நிறுத்தப்படுகிறது . இதற்கான வேரியண்ட்கள் தொடர்பான அறிவிப்பு இல்லாத நிலையில், R8 மாடலின் இடத்தை மின்சார கார் மாடல் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. R8 மாடலில் கடைசியாக கிடைத்த லாகுனா செகா வேரியண்ட் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Chevrolet Bolt EV and EUV: மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் செவி மின்சார வாகனங்களின் உற்பத்தி இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுகிறது. இந்த கார்கள் Ultium பேட்டரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தலைமுறையுடன் சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ford Escape: 2023 மாடல் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட Ford இன் பிரபலமான Escape காம்பாக்ட் SUV-யின் உற்பத்தி 2025 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்படுகிறது. அதன் இடத்தை மின்சார வாகனம் நிரப்ப உள்ளது.
Ford Transit Connect: 2023 தான் ஃபோர்டு ட்ரான்சிட் கனெக்டிற்கான கடைசி ஆண்டாகும். உலகளாவிய உற்பத்தி செலவு மற்றும் சிக்கலைக் குறைப்பதற்கான முயற்சிகள், காம்பாக்ட் வேன் பிரிவுக்கான தேவை குறைவு ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஐரோப்பாவில் இந்த மாடல் தொடர்ந்து கிடைக்கும்.
Jeep Cherokee/ Renegade: நீண்ட காலமாக சந்தையில் உள்ள செரோகி மாடலின் உற்பத்தியும் நடப்பாண்டுடன் நிறுத்தப்பட உள்ளது . உண்மையில் இந்த மாடலின் உற்பத்தி ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவடைந்துவிட்டது. இருப்பினும், பெரிய கிராண்ட் செரோகி உற்பத்தி மட்டும் சிறிதளவில் நடைபெற்று வந்தது. அதோடு, ஜீப் நிறுவனத்தின் ரெனெகேட் மாடலின் உற்பத்தியும் நிறுத்தப்படுகிறது.
Maserati Ghibli: மசெராட்டியின் நடுத்தர செடான் மாடலின் உற்பத்தியும் 2023ம் ஆண்டுடன் நிறைவடைகிறது.
Mercedes-Benz C-Class, E-Class Class Coupe, Cabriolet: C- மற்றும் E-கிளாஸின் கூபே மற்றும் கன்வெர்ட்டிபிள் ஆகிய இரண்டு மாடல்களின் உற்பத்தியும் நடப்பாண்டுடன் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை 2024 CLE-கிளாஸ் நிரப்பும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மெர்சிடிஸ் CLS செடான் மாடலும், மெர்சிடஸ் நிறுவனத்தின் மெட்ரிஸ் வேனின் உற்பத்தியும் 2023 உடன் ஓய்வு பெறுகிறது.