மேலும் அறிய
Advertisement
காலேஜ் போகும் ரோட்டில் டாஸ்மாக்....நாகையில் போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்...!
கல்லூரியை சுற்றி ஆபத்தான முறையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுங்க. காலேஜ் போகும் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கை இடம் மாற்றுங்க. போராட்டத்தில் இறங்கிய 700 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள்.
கல்லூரி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும், சுற்றுப்புறத்தில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர், அடிப்படை வசதிகள் செய்துதர கோரி நாகையில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் 700 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.
நாகை அடுத்த செல்லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து பேருந்து நிலையமாகவும் இருசக்கர வாகனம் மூலமாகவும் கல்லூரிக்கு வருகின்றனர். இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி செல்லும் சாலையில் மயானம் அருகே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு மது அருந்திவிட்டு செல்வோர்கள் நடந்து கொள்ளும் முறையால் மாணவர்கள் பெரிதும் அச்சமடைவதாகவும், அதனால் உடனடியாக வேறு பகுதிக்கு மதுபான கடையை இடம் மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் மழை காலங்களில் கல்லூரி வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதாலும், கழிவறை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருவதாலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்க வேண்டும், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், அரசு மதுபான கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டுமென கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கோஷங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
க்ரைம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion