தெலுங்கானா ஆளுநர் தமிழிசை யுகாதி வாழ்த்து
அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் யுகாதி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
தெலுங்கு வருடப்பிறப்ப ஆண்டுதோறும் யுகாதி பண்டிகையாக கொண்ட்டாப்படுகிறது. இந்த நிலையில், நாளை யுகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் யுகாதி தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பபிறப்பான யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனளதவில் ஒன்றுபட்டு நம் நாட்டின் ஆரோக்கியத்திற்காக கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த யுகாதியை கொண்டாடுவோம்.
தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனா பரவாமல் தடுத்து அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம். அனைவருக்குமு் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.