திடீரென சாய்பாபா கோயிலில் சிறப்பு யாகம் செய்த தவெக தலைவர் விஜய்யின் பெற்றோர்! என்ன விஷயம்?
இதனிடையே கட்சியை பலப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை விஜய் எடுத்து வருகிறார்.

சென்னை கொரட்டூர் சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் பெற்றோர் சிறப்பு யாகம் நடத்தினர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளதாக தெரிகிறது. அதற்கு பிரசாந்த் கிஷோரும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கட்சியை பலப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை விஜய் எடுத்து வருகிறார்.
முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் தொடங்கினார். அதன் மூலம் பல சமூக தொண்டு பணிகளை மேற்கொண்டார். இந்த இயக்கம் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவை ஆதரித்தது. அதேசமயத்தில் 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் இந்த இயக்கத்தினர் போட்டியினர். இதில் அவர்கள் போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்கள் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டன. அதற்கான ஆயத்த பணிகளையும் அப்போதிலிருந்தே அடிபோட்டு வந்தார். தனக்கு அரசியலுக்கு வர விருப்பம் இருக்கிறது என்பதையும் அவ்வபோது வெளிப்படுத்தி வந்தார். அதன்படி கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார்.
இந்த மாதத்தோடு தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை தவெக நிர்வாகிகள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்நிலையில், சென்னை கொரட்டூர் சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகரும் – ஷோபா சந்திரசேகரும் சிறப்பு யாகம் நடத்தினர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு அண்மையில் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் சாய்பாபா கோவிலில் விஜய்யின் பெற்றோர் சிறப்பு யாகம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த யாகத்தில் தவெக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கோயில் தனது தாயின் ஆசைக்காக விஜய் கட்டிகொடுத்த கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

