சில தினங்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர்.. இன்று கஞ்சா வியாபாரி - கைது செய்த போலீசார்
மயிலாடுதுறை அருகே வீட்டில் கஞ்சா வைத்திருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனன். வயது 36. இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நடவடிக்கை குற்ற செயல்களில் ஈடுபட்டுவதில் தொடர்பு இருப்பதையடுத்து இவரை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளனர்.
சிறிய கோயம்பேடாகும் காஞ்சிபுரம்.. காற்றில் பறக்கும் ஊரடங்கு..!
இந்த சூழலில் இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது. ரகசிய தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் செம்பனார்கோவில் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று மயில்வாகனன் வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் அங்கு சுமார் 40,000 ரூபாய் மதிப்புள்ள ஒன்றே கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வாகனத்திடம் விசாரணை மமேற்கொண்டுள்ளனர்
அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உணவகங்கள் மருந்து கடை, பால் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளுக்கும் திறக்க தடை விதித்துள்ளது. குறிப்பாக ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுநாள் வரை 27 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21 ஆயிரத்து 587 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் அவர்களின் மது போதைக்காக வெவ்வேறு வழிகளை தேடி வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் கள்ளத்தனமாக வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்வதும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், கஞ்சா அபின் உள்ளிட்ட போதை வஸ்துக்களை மறைமுகமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தினந்தோறும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் இந்தக் குற்றச்செயல்கள் குறைந்தபாடில்லை என்றும், மேலும் காவல்துறையினர் தீவிரப்படுத்தி இதனை முழுமையாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் அதிக நேரம் தூங்குபவரா? அப்போ.. இந்த 5 உங்களுக்குத் தான்!