மேலும் அறிய

வெள்ள பாதிப்பு! தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் - தொடர்பு எண்கள் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க நியமிக்கப்பட்டுள்ள குழுவினரின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைத்து  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க  முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண் 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தாத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு;

1. இரா. ஐஸ்வர்யா, இ.ஆ.ப. கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830

2. ஒ. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, தொலைபேசி எண். 9943744803

3. எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., தொலைபேசி எண். 9442218000. அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

1. சீ. கிஷன் குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, 9123575120

2.  ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி, தொலைபேசி 9940440659

இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர், பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் செயல்படுவார்.

நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதி கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் இப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையின் காரணமாக மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி நேற்று மதியம் வரையிலும் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. தாமிரபரணி கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க 

CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்

10th Exam: 10ஆம் வகுப்பில் 29.5 லட்சம் மாணவர்கள் தோல்வி; ஆண்டுதோறும் அதிகரிக்கும் எண்ணிக்கை- மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget