அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
நூல்கள் மூலம் திராவிட இயக்கத்தின் பெருமைகள் திசையெங்கும் செல்ல இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

நூல்கள் மூலம் திராவிட இயக்கத்தின் பெருமைகள் திசையெங்கும் செல்ல இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் அண்ணல் அம்பேத்கர், பகத் சிங் எழுத்துகள்வரை மொழிபெயர்த்து, தமிழுக்கு அறிமுகம் செய்தவர் தந்தை பெரியார். பிறநாட்டு அறிஞர்கள், தத்துவங்களைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நம் கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுப்பில், மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் புத்தக திருவிழா மூலம் ஏராளமான தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அந்தந்த மொழிகளில் நூல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், நம் திமுக இளைஞர் அணியின் முன்னெடுப்பான முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடுகளான `திராவிடத்தால் வாழ்கிறோம்’, `திராவிடப் போராளிகள்’, `திராவிட மாடல் அரசு’ ஆகிய நூல்கள் அரபு மற்றும் கொரிய மொழிகளில் மொழிபெயர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
.@muthamilarignar பதிப்பகம் வாயிலாக #திக்கெட்டும்_திராவிடம்! https://t.co/cFckrrsBus
— M.K.Stalin (@mkstalin) January 19, 2025
தந்தை பெரியார் காலம் முதல் திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட முக்கியமான பெண் ஆளுமைகளைப் பற்றி வழக்கறிஞர் அக்கா அருள்மொழி எழுதியுள்ள முக்கியமான நூல் `திராவிடப் போராளிகள்’.
நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றை இளம் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், ஓவிய வடிவில் அமைந்துள்ள இயக்க வரலாற்று நூலான `திராவிடத்தால் வாழ்கிறோம்’, கோவி லெலினின் சிறப்பான எழுத்தாக்கத்தாலும் ஓவியர் சொக்கலிங்கத்தின் உயிரூட்டும் ஓவியங்களாலும் ஆனது.
நம் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைக்கும் `திராவிட மாடல் அரசு’ வினோத் அவர்களின் எழுத்தாக்கத்தால் உருவானது.
இந்த மூன்று நூல்களும் மொழிபெயர்க்கப்படுவதன் மூலம், திராவிட இயக்கத்தின் பெருமைகள் திசையெங்கும் செல்ல இருப்பதற்கு, நம் முத்தமிழறிஞர் பதிப்பகமும் ஒரு காரணமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இந்நூல்களை அயல் மொழிகளில் கொண்டுசேர்க்க முன்வந்திருக்கும் பதிப்பாளர்கள் முனைவர் சரவணன் மற்றும் முனைவர் ஸ்ரீ ரோகிணி ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும்!” எனத் தெரிவித்தார்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முத்தமிழறிஞர் பதிப்பகம் வாயிலாக திக்கெட்டும் திராவிடம் என வாழ்த்தியுள்ளார்.





















