மேலும் அறிய
Advertisement
மூலப்பொருட்கள் இல்லை.... மூன்று மணி நேரம் தான் பணி... தவிக்கும் தீப்பெட்டி தொழிலாளர்கள்!
கையில் வைத்திருந்த மூலப்பொருள்களை வைத்து தான் தற்பொழுது தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர். மூலப்பொருள்கள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் தற்பொழுது தினமும் 3 முதல் 5 மணி நேரம் தான் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் முழு ஊரடங்கு காரணமாக மூலப்பொருட்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தீப்பெட்டி உற்பத்தியை முழுமையாக தொடங்க முடியமால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஆலைகளை மூட வேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர், தென்காசி, நெல்லை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் 2000 என 2300 தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றனர். இதனை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான குச்சிகளை தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், குளரேட் புதுவை மாநிலத்தில் இருந்தும், கேசின் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கினாலும், 2வது கொரோனா அலையின் காரணமாக 40 நாள்கள் வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த 2ந்தேதி முதல் தீப்பெட்டி ஆலைகள் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி செயல்பட தொடங்கியுள்ளன. தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கினாலும் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் அனைத்து கேரளா, கர்நாடகா, புதுச்சேரி குஜராத் மாநிலங்களில் இருந்து வரவேண்டியுள்ளது. அந்த மாநிலங்களிலும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மூலப்பொருள்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கையில் வைத்திருந்த மூலப்பொருள்களை வைத்து தான் தற்பொழுது தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர். மூலப்பொருள்கள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் தற்பொழுது தினமும் 3 முதல் 5 மணி நேரம் தான் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. எனவே தீப்பெட்டி மூலப்பொருள்கள் தட்டுப்பாடு இல்லமால் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை என்றும், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தங்கள் உரிமையாளர்கள் முழுமையாக வேலை கொடுக்கவில்லை என்றும், தினமு; 3 மணி நேரம் தான் வேலை கொடுப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதரம் இழந்து உள்ளதாகவும், மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டினை நீக்குவது மட்டுமின்றி, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தீப்பெட்டி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தீப்பெட்டி ஆலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி கொடுத்தாலும், தீப்பெட்டி மூலப்பொருள்கள் தட்டுபாடு இல்லமால் கிடைத்தால் மட்டுமே முழுமையாக தீப்பெட்டி உற்பத்தியை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடங்க முடியும். மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ. 2ஆயிரம் நிவாரண தொகை வழங்கியது. அதை போன்று தற்பொழுது ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion