கரூரில் கட்டண உயர்வால் 'கலகலத்த' ரயில் பெட்டிகள் - குறைவான கட்டணத்தால் களை கட்டும் பஸ்கள்..!
கரூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் காலை, மாலை இரு நேரமும் திருச்சி ஈரோடு பாஸ்ட் பேசஞ்சர் ரயிலில் தான் சென்று வந்தனர்.
கட்டண உயர்வால் 'கலகலத்த' ரயில் பெட்டிகள் குறைவான கட்டணத்தால் களை கட்டும் பஸ்கள். கட்டண உயர்வால் ரயில் பெட்டிகள் கலகலத்துப் போய் உள்ளன. குறைவான கட்டணத்தால் பஸ்கள் களைகட்டி காணப்படுகின்றன.
உடல் அலுப்பு இல்லாமல் சொகுசாக செல்ல விரும்புபவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே நாடுவர். கடந்த சில மாதங்கள் வரை கட்டணம் வேறு குறைவாக இருந்ததால் ரயில் பெட்டிகள் ஹவுஸ்புல்லாக தான் சென்று கொண்டிருந்தன. கரூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் காலை, மாலை இரு வேளையும் திருச்சி-ஈரோடு பாஸ்ட் பேசஞ்சர் ரயிலில் தான் சென்று வந்தனர். கொரோனா காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்களை வேலை அழைத்துச் செல்ல தனியார் நிறுவனமே பஸ், வேன் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்று வந்தது. இன்னும் சில தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் சென்று வந்தனர்.
கொரோனா முடிந்து திருச்சி ஈரோடு ரயில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் நிற்க கூட இடமில்லாமல் சென்று வந்த ரயில், இப்போது கூட்டம் இன்றி கலகலப்பு போய் சென்று வருகிறது. என்ன காரணம் என்று தொழிலாளர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்திவிட்டது தான் காரணம். ரயிலில் குறைந்த டிக்கெட் கட்டணம் என்று எடுத்துக் கொண்டால் ரூ.30 தான். பயணிகள் குளித்தலை, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், கரூர், புகலூர் வரை செல்ல மினிமம் டிக்கெட் ரூ.30 செலுத்தி டிக்கெட் பெற்று செல்ல வேண்டும்.
இதுவே பஸ்களில் குளித்தலை, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம் செல்ல டிக்கெட் கட்டணம் ரூ.10 தான். கரூர் செல்ல அரசு பஸ்களில் கட்டணம் ரூ.25, தனியார் பஸ்ஸில் சென்றால் ரூ.20 தான். தாறுமாறாக உயர்ந்த ரயில் கட்டணத்தால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் சாதாரண தொழிலாளர்கள் ரயில் பயணத்தை தவிர்த்து பஸ் பயணத்தை நாடிவரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
மேலும் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயிலின் கட்டணம் அதிகரித்துள்ளதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், பொதுமக்கள் ரயில் பயணத்தை பெரிதும் தவிர்த்து பேருந்தில் பயணம் செய்கின்றனர். ஆதலால், ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கட்டண உயர்வால் ரயில் பெட்டிகள் எல்லாம் கூட்டம் இன்றி சென்று வருகின்றன. பஸ்கள் எப்போதும் போல் களை கட்டி உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்