மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் திடீரென மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஏறத்தாழ 6 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் வரலாறு காணாத வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்த சூழலில் இந்த கனமழைக்கு மேகவெடிப்புதான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் அதனை சென்னை வானிலை ஆய்வு மையம் மறுத்துவிட்டது. மேலும் வானிலை ஆய்வு மையம் மழை குறித்து கூறுகையில், “கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால் கனமழை பெய்தது.
Very heavy rain lashing #chennai and most of the roads were flooded #chennairains pic.twitter.com/uxER5uKky5
— Chennai Weather (@chennaiweather) December 30, 2021
கடலில் இருக்கும் கணிக்கப்பட்ட வளிமண்டல சுழற்சி திடீரென நிலப்பகுதிக்கு நகர்ந்தது. அதிகனமழை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. நிலப்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சியை கடலில் இருப்பதாக கணித்துவிட்டோம். நிலப்பகுதியில் இருந்ததை கணிக்க தவறிவிட்டோம். இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்தளவுதான் கணிக்க முடிந்தது” என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
இந்நிலையில், நாகை, மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: chennai Rains: நள்ளிரவில் சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
Chennai Rains | கனமழை முதல் அதிகனமழை.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!