chennai Rains: நள்ளிரவில் சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இன்று மதியம் சுமார் 7 மணி நேரத்திற்காக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுசென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 6 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்று திரும்பிய உடன் சென்னை மழை தொடர்பான விஷயங்களை நள்ளிரவில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் சென்னை மாநகராட்சியின் மழை கட்டுப்பாடு இடத்திற்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மழை பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மழை பாதிப்பு தொடர்பாக விளக்கினார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3000 கன அடியாக உள்ள நிலையில் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூரில் பெய்து அரும் கனமழை காரணமாக புழல் ஏரியிலிருந்து 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து 2000 கன அடியாக இருப்பதால் விநாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ள அளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 3,180 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதன்காரணமாக அங்கு இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கும் நீரவரத்து 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நான்கு சுரங்க பாதைகள் முடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு !