Chennai Rains | கனமழை முதல் அதிகனமழை.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 6 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில்'மத்திய சென்னையில் கடுமையான மழை பெய்துள்ளது. நுங்கப்பாக்கம், தி நகர் போன்ற பகுதிகளில் 15 செமீ மழை வரை பதிவாகியுள்ளது.
Heavy unexpected downpour 😥#chennairains pic.twitter.com/7cESJCAHuS
— Aathmika (@im_aathmika) December 30, 2021
சென்னை கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருகிறது. கிழக்கு பக்கத்தில் இருந்து வரும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மழை மேகங்கள் சென்னை கடற்கரை ஓரங்களிலேயே மழையாக பெய்கிறது. அதனால் கடற்கரை ஓர பகுதிகளில் பயணம் செய்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். சென்னையின் உள்பகுதியில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் எதிர்பாராத மழை பெய்துள்ளது என்றார். மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெதர்மேன், 2015ம் ஆண்டில் பெய்த வருடாந்திர மழை அளவை இந்த ஆண்டு மழை முந்திவிட்டது.
தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் அமைந்தள்ள பல அறைகளின் உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. மேலும், தி.நகர், ஆயிரம் விளக்கும், தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி,விருகம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக நந்தனத்தில் 8 செ.மீ.மழையும், நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்