மேலும் அறிய

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

ஊரடங்கு நேரத்தில் உணவு இல்லாத இடங்களுக்கு உணவுகளை தேடி, தேடி கொடுத்துவருகிறார். தங்களது வீட்டில் சமைத்த உணவுகளை பார்சல் செய்து கொடுத்துவருகிறார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

”நான் செய்றது சிறிய உதவி என்றாலும் பசியோட கிடக்கிற ஆதரவற்றவங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலா இருக்கும். அதை அவங்க கண்ணுல உணர முடியுது.” என்று மகிழ்கிறார் முத்துக்குமார்

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

கொரோனா இரண்டாவது பேரலையை  தடுக்கும் வகையில் நாட்டில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. அரசு நிகழ்வுகள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் பலரும் பணிக்குச் செல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

அரசு சார்பாக ஒரு பக்கம் உதவி ஏற்பாடு செய்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றொரு பக்கம் கைகோர்த்து உதவி செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது நான்கு சக்கர ( மாற்றுத்திறனாளி) மோட்டார் பைக்கில் மனைவியுடன் சேர்ந்து உதவி செய்துவருகிறார். ஜெராக்ஸ் கடை நடத்தி குறைந்த வருமானம் ஈட்டினாலும் தன்னால் முடிந்த உதவியாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என உதவி செய்துவருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த  சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். 

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

பிரான்மலை பகுதியில் குட்டி ஜெராக்ஸ் கடை வைத்துக் கொண்டு தன் குடும்பத்தை கவனித்து வருகிறார்.  அம்மா, மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என இவரது வருமானத்தை நம்பி தான் குடும்பம் செயல்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் உணவு இல்லாத இடங்களுக்கு உணவுகளை தேடி, தேடி கொடுத்துவருகிறார். தங்களது வீட்டில் சமைத்த உணவுகளை பார்சல் செய்து கொடுத்து, பசியாற்றி மகிழ்கிறார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

இது குறித்து முத்துக்குமார் நம்மிடம்...," எனக்கு சின்ன வயசுல படிப்பு மண்டைல ஏறல. மூனாப்போட படிப்ப நிப்பாட்டிட்டேன். நல்லா வெவரம் தெரிஞ்சதுக்கு அப்றம் தான் படிப்போட அருமை தெரிஞ்சுச்சு. எங்கையும் வேலை கெடைக்கல. அதனால சொந்தமா ஜிராஸ் (ஜெராக்ஸ்)  கடை வச்சுட்டேன். எனக்கு ஒடம்புல 85% குறை இருக்குனு மாற்றுத்திறனாளி சட்டிவிகேட்டு குடுத்துருக்காங்க. அதனால அரசோட சில சலுகை கிடைக்குது. ஜிராக்ஸ் கடைய வச்சுதான் வீட்டோட வருமானம்.

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

இருந்தாலும் எனக்கு இலகுன மனசு. யாருக்கும் ஈசிய உதவி செஞ்சுருவேன். போனவருசம் லாக்டவுன் போட்டப்ப தொழில் முடங்கிருச்சு. அந்த சமயத்தில் பிரான்மலை…,ல  ஒரு டீ கடைல, டீ குடிச்சுக்கிட்டு இருந்தே. அப்ப ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா பசில வாடி திருஞ்சத பார்த்தேன். அது என்ன ரெம்பவும் நோகடிச்சுருச்சு. அவங்களுக்கு ஒரு டீ..,யும் பண்ணும் வாங்கி கொடுத்தேன். வீட்டுக்கு போனதுக்கு அப்ரம் என் மனைவீட்ட சொன்னே. நாமலே சாப்பாடு செஞ்சு, கொஞ்ச பேத்துக்கு குடுக்கலாம்னு ஐடியா வந்துச்சு அதனால வீட்லையே தக்காளி சோறு, புளி சோறு, தயிர் சோறுனு.., செஞ்சு கொடுத்தோம்.

Social Service : உணவில்லாதவர்களை தேடித் தேடி உணவளிக்கும் மாற்றுத்திறனாளி!

இதபார்த்துட்டு என் நண்பர்களும் உதவி செஞ்சாங்க. என் மனைவி என்னோடையே வந்து சாப்பாடும் குடுத்தா. அது அவளுக்கு சந்தோசமா பட்டுச்சு. அதே மாதிரி இந்த வருசமும் சாப்பாடு கொடுக்குறோம். என் நண்பர்களும் என்னுடைய சேவைல பங்கெடுக்கிறாங்க. நான் செய்றது சிறிய உதவி என்றாலும் பசியோட கிடக்கிற ஆதரவற்றவங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலா இருக்கு. அதை அவங்க கண்ணுல உணர முடியுது. தொடர்ந்து என்னால் முடிந்த உதவிய கண்டிப்பா செய்வேன்" என்றார் ஆனந்தக் குரலில்.

தலைப்பு செய்திகள்

" எங்கள் சின்னத்தை திருடாதீர்கள் " TVK - வை கடுமையாக சாடிய AIADMK
தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!
தமிழி எழுத்தில் 1330 திருக்குறள்: மாணவிகளின் வரலாற்றுப் படைப்புக்கு ஆட்சியர் வாழ்த்து!
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
மதுரை வரும் முதல்வர் விஜய்? வேகம் எடுக்கும் ஏற்பாடு பணிகள் - முழு விவரம் !
மதுரை வரும் முதல்வர் விஜய்? வேகம் எடுக்கும் ஏற்பாடு பணிகள் - முழு விவரம் !

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget