மேலும் அறிய
Advertisement
திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து மாற்றம் ரத்து!
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படும் எனும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து மாற்றம் ரத்து
திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 27, 28, 30, 31 ஆகிய நாட்களில் காலை 07.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (16848), குருவாயூரிலிருந்து டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 31 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354), பனாரஸிலிருந்து டிசம்பர் 29 அன்று புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322) ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படும்.
மேலும் சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில்கள் வழக்கம் போல மதுரை வரை இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து டிசம்பர் 27, 30 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16845) மற்றும் செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு (16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ரயில்கள் செங்கோட்டை - ஈரோடு ரயில் நிலையங்கள் இடையே முழுமையாக இயக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Viduthalai 2: விடுதலை பார்ட் 2; ஓடிடியில் கூடுதல் ஒரு மணிநேரத்துடன் வெளியாவதாக தகவல்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion